மயங்கி விழுந்த ஆயிஷா...பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு..இனிமேல் நிகழ்ச்சியில் தொடர்வாரா?
சென்னை : நடிகை ஆயிஷா மயங்கி விழுந்ததால் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5 கடந்த ஜனவரியில் முடிந்த நிலையில், அனைவரும் ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
ஐந்து சீசன்களை கமல் தொகுத்து வழங்கியதைப் போல இந்த சீசனையும் கமல் அவர்களே தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சியில் தினமும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் என 19 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

தீபாவளி கொண்டாட்டம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்று தலைவர் பதவிக்கான போட்டி, நாமினேஷன் என அனைத்தும் நடைபெற்று முடிந்ததை அடுத்து, தீபாவளி கொண்டாட்டத்திற்கு போட்டியாளர்கள் விதவிதமான உடை அணிந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என அனைவரும் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். அப்போது, ஆயிஷா, யாரிடமும் சொல்லாமல் வீட்டிற்குள் வந்து அமர்ந்து விட்டார்.

மயங்கி விழுந்த ஆயிஷா
ஆயிஷாவை தொடர்ந்து வந்த ஷெரின் மற்றும் அசீம் என்ன ஆச்சு என கேட்டுக்கொண்டே இருந்தனர். இதையடுத்து, உடல் நிலை சரியில்லை, மூச்சுவிட முடியவில்லை என பேசிக்கொண்டே இருந்த ஆயிஷா திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே அசீம் தூக்கிக்கொண்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச்சென்றார். இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சியில் தொடருவாரா?
ஆயிஷா வீட்டிற்கு வந்த முதல் நாளே மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். தற்போது இவர் மயங்கி விழுந்துள்ளதால் இவர் நிகழ்ச்சியில் தொடருவாரா இல்லை வெளியேற்றப்படுவாரா என்று தெரியவில்லை. என்னத்தான் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டாலும், ஆயிஷா மயக்கி விழுந்ததும் பதறி தூக்கிக்கொண்டு ஓடிய அசீமை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











