ஆடின காலும் பாடின வாயும் ஆயிஷா கபூருக்கு நிக்காது போலயே

By R VINOTH

சென்னை: ஆடியா காலும் பாடிய வாயும் சும்மாவே இருக்காது என்று சொல்வார்கள். அது மாதிரியே, ஆயிஷா கபூர் தற்போது பளபளன்னு கிளாமர் போஸ் கொடுத்து எல்லா சோசியல் மீடியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு காரணம், மறுபடியும் பாலிவுட் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பதற்கு தான் என்று பாலிவுட் சினிமா வட்டாரம் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

பிளாக் படத்தில் சின்ன வயது ராணி முகர்ஜியாக நடித்த ஆயிஷா கபூர், நடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுவிட்டு மேல் படிப்புக்கு அமெரிக்க சென்றவர் இந்தியா திரும்பி தொழிலதிபரானாலும், தற்சமயம் பாலிவுட்டில் மீண்டும் தலைகாட்ட முடிவெடுத்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. சமீபத்தில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் சகோதரர் இஷான் கபூரையும், ஆயிஷா கபூரையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளி வந்தது இப்போது அவருடைய கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வலம் வருகின்றன.

Ayesha Kapur ready to enter in Bollywood Cinema

பாலிவுட்டில் 2005ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் 'பிளாக்'. இந்தப் படத்தை இயக்கியவர் பாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரான 'சஞ்சய் லீலா பன்சாலி'. இந்தப் படத்தின் மூலம் மாபெரும் உச்சத்தை அடைந்தார். அதே போல், இந்தப் படத்தில் நடித்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும், ராணி முகர்ஜிக்கும் வேறு ஒரு பக்கத்தை தந்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் படக்குழுவினர் அனைவருக்கும் ஒரு காட்சிப் பதிவுகளை விருந்தாகவே கொடுத்தார்.

பிளாக் படத்தில் சின்ன வயது ராணி முகர்ஜியாக நடித்தவர் தான் 'ஆயிஷா கபூர்'. இந்தப் படத்தில் நடித்ததால் மிகவும் பிரபலம் அடைந்ததோடு, பெரும் புகழும் பெற்றுவிட்டார். அதன் பிறகு நடிப்புக்கு சற்று இடைவெளி விட்டு தனது மேல் படிப்புக்காக அமெரிக்கா போனார். அமெரிக்காவின் கொலம்பியாவில் மேல் படிப்பை முடித்து விட்டு இந்தியா திரும்பியவர் உடனடியா சினிமாவில் தலைகாட்டாமல், தன்னுடைய குடும்ப தொழிலையே கவனித்து வந்தார். சினிமாவை விட்டு சற்று ஒதுங்கி இருந்தாலும் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வந்துகொண்டு தான் இருக்கிறார்.

என்னதான் இருந்தாலும், ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா? அது மாதிரியே, ஆயிஷா கபூர் தற்போது பளபளன்னு கிளாமர் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து எல்லா சோசியல் மீடியாவிலும் அதை போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதற்கு காரணம், மறுபடியும் பாலிவுட் சினிமாவில் எண்ட்ரி கொடுப்பதற்கு தான் என்று பாலிவுட் சினிமா உலகினர் கிசுகிசுக்கின்றனர். ஆனாலும், அவர் எந்த மொழிப் படத்தில் நடித்து வெற்றி பெறப் போகிறார் என்பது தான் கேள்விக் குறியா இருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X