Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸில் இருந்து ஜாலியாக வெளியேறிய ஆயிஷா... லட்சக்கணக்கில் சம்பளம்... இதெல்லாம் ஓவரா இல்லையா?
சென்னை: அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் இதுவரை 10 பேர் எவிக்சன் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் ராம், ஆயிஷா என இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதால் மொத்தம் 11 போட்டியாளர்கள் மட்டுமே போட்டியை தொடருகின்றனர்.
பிக்
பாஸ்
வீட்டின்
லக்கி
போட்டியாளர்
இவர்
தான்...
கும்பலாக
சேர்ந்து
மெடல்
போட்டுவிட்ட
ஹவுஸ்மேட்ஸ்

இந்த வாரம் முதல் எவிக்சன்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6, 63 நாட்களைக் கடந்துள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், இதுவரை ஜிபி முத்து, அசல் கோளாறு, நிவாஷினி உள்ளிட்ட 8 பேர் வெளியேறியிருந்தனர். ஆனால், இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் என்பதால் ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. அதேநேரம் ஏற்கனவே வெளியான தகவல்களின் படி முதல் ஆளாக கிரிக்கெட் வீரர் ராம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். ஆரம்பம் முதலே கார்னர் செய்யப்பட்ட ராம், 60 நாட்கள் வரை தாக்குப்பிடித்ததே பெரிய விசயம் தான் நெட்டிசன்கள் கமென்ட்ஸ் செய்திருந்தனர்.

ஜாலியாக வெளியேறிய ஆயிஷா
சனிக்கிழமை ராம் வெளியேறிய நிலையில், எவிக்சன் ஆகப் போகும் இன்னொரு போட்டியாளர் யார் என்பதையும் ரசிகர்கள் ஈஸியாகவே யூகித்து விட்டனர். அதன்படி இந்த வாரம் இரண்டாவது ஆளாக ஆயிஷா வெளியேறினார். ஆனால், இறுதிப் பட்டியலில் ஆயிஷாவுடன் ஜனனியும் நீண்ட நேரம் டஃப் கொடுத்து ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் கொடுத்திருந்தார். ஆயிஷா எவிக்சன் என கமல் அறிவித்ததுமே, அவர் ஜாலியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனல் நிச்சயம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிடுவோம் என்பதை ஆயிஷா நன்கு அறிந்தே இருந்துள்ளார் என தெரிந்தது.

ஆயிஷாவின் பிக் பாஸ் அனுபவம்
இதனிடையே பிக் பாஸ் வீட்டை விட்டு ஆயிஷா வெளியேறும் தனலட்சுமி கதறி அழுது அவரை வழியனுப்பி வைத்தார். அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டின் அனுபவம் குறித்து ஆயிஷாவிடம் கேட்டார் கமல். அப்போது பேசிய ஆயிஷா, "என்னால் டைட்டில் வின் பண்ண முடியுமா என்ற சந்தேகம் இருந்தது உண்மை தான். இத்தனை நாள் நான் விளையாடியதே பெரிது தான். இதற்குமேல் நான் இருந்தாலும் போட்டியை சமாளிக்க முடியாது. இருந்தவரை பல நல்ல அனுபவங்கள் கிடைத்தன, அதுவே போதும்" எனத் தெரிவித்தார்.

சம்பளம் இத்தனை லட்சமா?
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆயிஷாவுக்கு நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி மொத்தம் 12.50 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளதாகவும், அதுதவிர எல்.இ.டி டிவி உட்பட ஏராளமான பரிசுப் பொருட்களையும் தட்டிச் சென்றுள்ளார் ஆயிஷா. சீரியல் நடிகையான ஆயிஷா பிக் பாஸ் வீட்டில் மிகவும் பலவீனமான போட்டியாளராகவே பார்க்கப்பட்டார். முக்கியமான பல டாஸ்குகளில் அவர் முழுமையாக பங்கேற்று விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஆயிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.