ராமர் கோயில் திறப்பு விழா.. பாகுபலி 2 இடைவேளை காட்சி போல இருக்கு.. திரெளபதி இயக்குநர் போட்ட ட்வீட்!

சென்னை: அயோத்தியில் இன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் அங்கே படையெடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது மகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள அயோத்திக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா குறித்து திரெளபதி பட இயக்குநர் மோகன். ஜி ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் பல கோடி மக்கள் ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியை காண ஆர்வமாக உள்ளனர். பல மாநிலங்களில் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில், ஆதரவு கருத்துகளும் எதிர்ப்பு கருத்துகளும் சமூக வலைதளங்களில் காணப்படுகிறது என்பதை மோகன். ஜி குறிப்பிட்டுள்ளார்.

Ayodhya Ram Mandir Pran Prathishta is like Bahubali 2 interval says by Mohan G

ராமர் சிலை பிரதிஷ்டை: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இன்று ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதமர் மோடி கோயிலை திறந்து வைக்கும் விழாவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. கடந்த 16 ஆம் தேதி முதல் அயோத்தியில் இதற்காக சிறப்பு பூஜைகள் மற்றும் யாகங்கள் தொடங்கின. அயோத்தி ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை நேரில் காண லட்சக் கணக்கான மக்களும் ஆயிரக் கணக்கான பிரபலங்களும் அங்கே குவிந்துள்ளனர்.

Ayodhya Ram Mandir Pran Prathishta is like Bahubali 2 interval says by Mohan G

திரெளபதி இயக்குநர் ட்வீட்: இந்து மதத்தில் அதிக பற்றுக் கொண்ட இயக்குநர் மோகன். ஜி திரெளபதி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தைத் தொடர்ந்து ருத்ர தாண்டவம் படத்தை இயக்கினார். அதன் பின்னர், செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை கடைசியாக எடுத்து முடித்தார். அனைத்து படங்களுமே கடவுள் மற்றும் புராண தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழா குறித்து ட்வீட் ஒன்றை மோகன். ஜி போட்டுள்ளார்.

Ayodhya Ram Mandir Pran Prathishta is like Bahubali 2 interval says by Mohan G

பாகுபலி இன்டெர்வெல்: "வரலாற்றை மாற்றி எழுதும் முக்கியமான நாள் இன்று. மன்னர்கள் காலத்தில் ஒரு கோவிலை எப்படி அமைத்திருப்பார்கள் என அறிந்து கொள்ள முடிகிறது. ஆதரவும், எதிர்ப்பும், பக்தியும் குரோதமும் கலவையாக பார்க்க முடிகிறது.. பாகுபலி இரண்டாம் பாகத்தின் இடைவேளை காட்சி நினைவுக்கு வருகிறது
#jaishriram" என பதிவிட்டு இருக்கிறார் மோகன். ஜி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X