Ayogya: காலையிலேயே ஷாக் தந்த விஷால்... கடைசி நேரத்தில் ரத்தானது அயோக்யா ரிலீஸ்!

விஷால் நடித்துள்ள அயோக்யா திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

Ayogya Movie: அயோக்யா பட ரிலீஸ் கடைசி நிமிடத்தில் தள்ளிப் போனது குறித்து காட்டமாக ட்வீட்- வீடியோ

சென்னை: விஷாலின் அயோக்யா திரைப்பட ரிலீஸ் கடைசி நேரத்தில் ரத்தாகியுள்ளது.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கியுள்ள படம் அயோக்யா. விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் தான் அயோக்யா. இப்படம் இன்று மே 10ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Ayogya release postponed at the last minute

நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில், "அயோக்யாவின் வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டது", என இரு தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதற்கு ஏற்றார் போல் அன்றைய தினமே சென்சாரில் படத்துக்கு யு/ஏ சான்று வழங்கப்பட்டது.

எல்லாம் ரெடியாக இருந்த நேரத்தில் இன்று காலை திடீரென அயோக்யா பட ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விஷால் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதர்வா நடித்துள்ள 100 திரைப்படத்துக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. நேற்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அப்படத்தின் ரிலீசும் தள்ளிப்போனது. நீதிமன்றம் மூலம் படத்தின் மீதான தடையை நீக்கி, இன்று தான் அந்த படத்தை ரிலீஸ் செய்கின்றனர்.

இந்நிலையில் விஷால் படத்துக்கும் அதேபோன்றதொரு நிலைமை ஏற்பட்டிருப்பது, கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X