'அயோக்யா' கதை சுடல ஆனால் சுட்டுட்டாங்க: குழப்பும் பார்த்திபன்
சென்னை: அயோக்யா கதை தன் படத்தில் இருந்து சுட்டது என ட்விட்டரில் தெரிவித்தது குறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்.
விஷாலின் அயோக்யா படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார் பார்த்திபன். இந்நிலையில் அயோக்யா கதை தன் உள்ளே வெளியே படத்தின் கதை என்று ட்விட்டரில் தெரிவித்தார் அவர்.
பார்த்திபனின் ட்வீட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பார்த்திபன்
சர்ச்சையாக ஏதாவது பேசினாலோ, ட்வீட் செய்தாலோ படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பதால் தான் பார்த்திபன் இப்படி ட்வீட் செய்தார் என்று நெட்டிசன்கள் சொன்னபடி தான் நடந்துள்ளது.
விஷால்
விஷாலுக்கும் எனக்கும் என்றுமே பிரச்சனை இல்லை! இப்போதும் வழக்காட வரவில்லை. வழக்கமான என் (100%உண்மையான) அக்மார்க் அக்குறும்பே! கெட்ட போலீஸ், ஒரு நல்ல போலீஸால் திருந்துவதன் விளை(யும்)வுகள்! இந்த மையக் கரு இரண்டிலும் ஒன்றே! Doubt-ன்னா பாருங்க என்கிறார் பார்த்திபன்.

அயோக்யா
பார்த்திபனின் ட்வீட்டை பார்த்தால் அயோக்யா படக்குழு என் கதையை சுடல ஆனால் சுட்டுவிட்டார்கள் என்பது போன்று உள்ளது. நல்லா தேடுறீங்க சார் விளம்பரம். நல்லா வருவீங்க.
விளையாட்டு
தன் உள்ளே வெளியே படத்தின் மையக்கரு அயோக்யாவுடன் ஒத்துப் போகிறது என்ற பார்த்திபனின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் இப்படி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











