Ayogya teaser: பர்ஸ்ட் பீர் பாட்டில்.. இப்போ மகாத்மா.. திரும்பத் திரும்ப அதையே பண்றீங்களே விஷால்!
நடிகர் விஷாலின் அயோக்யா பட டீசரில் சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
Recommended Video

சென்னை: நடிகர் விஷாலின் அயோக்யா பட டீசரில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
சண்டக்கோழி-2' படத்தைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் படம் அயோக்யா'. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக, ராஷி கண்ணா நடிக்கிறார். நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். 'டெம்பர்' எனும் தெலுங்குப் படத்தின் ரீமேக் தான் இது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
சமீபத்தில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப்பில் விஷால் அமர்ந்திருப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பாமக உள்ளிட்ட கட்சிகள் இப்போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதை படக்குழு கண்டுகொள்ளவில்லை.

சர்ச்சை வசனம்:
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதிலும் சர்ச்சைக்குரிய சில வசனங்கள் இடம்பெற்றுள்ளன. டீசரின் துவக்கத்திலேயே, தேசப்பிதா மகாத்மா காந்தியின் புகைப்படத்தை காண்பித்து, "நாட்டில் நடக்கும் அத்தனை அநியாயத்துக்கும் முதல் சாட்சி இவர் தான்", என்ற வசனம் இடம்பெறுகிறது. இதனை காந்தியவாதிகளும், பிற அரசியல் கட்சியினரும் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

போலீஸாக விஷால்:
"நீதி, நியாயம்னா ஸ்பெல்லிங் என்னன்னு கேக்கற ஒருத்தன்", "நீதானா அந்தக் குயில்", "எனக்கு பணத்துமேல ஆசை", போன்ற வசனங்களும் டீசரில் இடம்பெற்றுள்ளன. விஷால் போலீஸாக நடித்துள்ள இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது என்பது டீசரை பார்க்கும் போது தெரிகிறது.
கோடை விடுமுறை ரிலீஸ்:
கோடை விடுமுறையையொட்டி அயோக்யா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டீசரை தொடர்ந்து, விரைவில் பாடல்களும் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications











