நான் அயோக்யன், அந்த மாதிரி ஆள், கேவலமானவன்: என்ன விஷால் இப்படி பேசுறீங்க?
Recommended Video
சென்னை: விஷாலின் அயோக்யா பட ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
புதுமுகம் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் அயோக்யா. ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக்.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடித்துள்ளார். பார்த்திபன் வில்லனாக நடித்திருக்கிறார். அயோக்யா படம் வரும் மே மாதம் 10ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாகியுள்ளது.

அயோக்யா
ஆண்டவன் படைச்சான், என்கிட்ட கொடுத்தான் என்று விஷால் பாடுவதுடன் ட்ரெய்லர் துவங்குகிறது. எடுத்த எடுப்பில் பீர் பாட்டிலுடன் வருகிறார் விஷால். அடுத்த லெவல் பஞ்சாயத்து கண்டிப்பாக உள்ளது. போஸ்டரில் பீர் பாட்டிலை பார்த்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் ட்ரெய்லரை மட்டும் சும்மாவிடுவார்களா என்ன?

பணம்
நீதி, நேர்மை, நியாயம் எல்லாமே அவனுக்கு பணம், பணம் தான் சார் என்று கூறி பணத்தை காட்டியுள்ளனர். நான் அந்த மாதிரி ஆள் தான், கேவலமானவன் தான் என்று தன்னை பற்றிய உண்மையை சொல்லும் நல்லவராக நடித்துள்ளார் விஷால்.
யோகி பாபு
திருடுவதில் 60, 40 என்று சொல்லும் விஷாலிடம் தெய்வமே அரசியலுக்கு வரும் எல்லாத் தகுதியும் உனக்கு இருக்கிறது என்கிறார் யோகி பாபு. ஒரு பொண்ணை பார்த்த உடனேயே அவரை தூக்கிட்டுப்போய் ரேப் பண்ணும் தைரியம் எங்களுக்கு இருக்கு என்று நீதிமன்றக் கூண்டில் நின்று விஷால் பேசியுள்ளார். இது கண்டிப்பாக பரபரப்பை ஏற்படுத்த இப்படி எடிட்டிங் செய்திருக்கிறார்கள். ஆமாம், நான் அயோக்யன்தான் என்று விஷால் கூறுவதுடன் முடிகிறது ட்ரெய்லர்.
விஷால்
ட்ரெய்லரை பார்க்கும் போது சர்ச்சைக்கும், ஆக்ஷனுக்கும் குறைவிருக்காது என்பது தெரிகிறது. ஆமாம், நான் அயோக்யன் தான் என்று விஷால் பேசிய வசனம் தான் பலருக்கும் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











