'அயோக்யா'வை தியேட்டரில் பார்க்கலாமா, வேண்டாமா?: ட்விட்டர் விமர்சனம்
சென்னை: விஷாலின் அயோக்யா படம் பார்த்தவர்கள் அது குறித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
விஷால் நடித்த அயோக்யா படம் சில பிரச்சனைகளுக்கு பிறகு ஒரு வழியாக நேற்று ரிலீஸானது. படம் வெளியான கையோடு அதை ஆன்லைனில் வெளியிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.
இந்நிலையில் அயோக்யா பற்றி ட்விட்டரில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.
விஷால்
வரலாற்று சிறப்புமிக்க கிளைமாக்ஸ் 👏😢 விஷால் நடிப்பு சிற்பபு 👌👌 மிகச்சிறந்த திரைக்கதை 👏👏 என்கிறார் அப்துல்.
சிறப்பு
அயோக்யா டெம்பர் தெலுங்கு படத்தின் ரீமேக் ஆகும். இந்நிலையில் படத்தை பார்த்த இவரோ டெம்பரை விட அயோக்யா நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கிளைமாக்ஸ்
அயோக்யா கிளைமாக்ஸ் தான் படமே... நல்ல படம் 80/100. ஸ்லோ மோஷன் காட்சிகளை தவிர்ப்பது நல்லது என்கிறார் சக்தி.
அயோக்யா
ட்ரெய்லர் மட்டும் தான் மாஸ். படத்தை கே டிவியில் போடும்போது பார்த்துக் கொள்ளுங்கள். பார்த்திபன் மற்றும் யோகிபாபு ஆகியோரின் நடிப்பு தான் அசத்தல் என்கிறார் ஜெகன்.


Click it and Unblock the Notifications











