அயோத்தி சக்சஸ் பார்ட்டி... சசிகுமார் கொடுத்த தங்கச் சங்கிலி... நெகிழ்ந்துபோன இயக்குநர்!

சென்னை: சசிகுமார் நடித்துள்ள அயோத்தி திரைப்படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மந்திரமூர்த்தி இயக்கிய இந்தப் படம் மனிதம், மதநல்லிணக்கம் என ரசிகர்களுக்கு பாசிட்டிவான வைப் கொடுத்தது.

பல வருடங்களுக்குப் பிறகு சசிகுமாருக்கு ஒரு தரமான வெற்றிப் படமாக அமைந்தது அயோத்தி.

இந்நிலையில், இந்த வெற்றியை அயோத்தி படக்குழுவினருடன் கேக் வெட்டி அன்பளிப்பு கொடுத்து கொண்டாடியுள்ளார் சசிகுமார்.

 முழுநேர நடிகரான சசிகுமார்

முழுநேர நடிகரான சசிகுமார்

சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் சசிகுமார். முதல் திரைப்படத்திலேயே பிரபலமான சசிகுமார், அதன்பின்னர் ஈசன் படத்தை மட்டுமே இயக்கினார். அதேநேரம் நாடோடிகள், சுந்தரபாண்டியன், பேட்ட, கிடாரி, குட்டிப்புலி என பல படங்களில் ஹீரோவாகவும், லீடிங் கேரக்டரிலும் நடித்துள்ளார். ஆனாலும் சில வருடங்களாகவே சரியான வெற்றிப் படம் அமையாமல் தடுமாறினார் சசிகுமார்.

 மனிதம் பேசிய அயோத்தி

மனிதம் பேசிய அயோத்தி

இந்நிலையில், சசிகுமார் நடித்த அயோத்தி திரைப்படம் கடந்த 3ம் தேதி வெளியானது. சசிகுமாருடன் குக் வித் கோமாளி புகழ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. மனிதம், மத நல்லிணக்கம் என பல பாசிட்டிவான அம்சங்களை பேசிய அயோத்தியை சினிமா விமர்சகர்களும் கொண்டாடித் தீர்த்தனர். கடந்த 3 வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது அயோத்தி.

 அயோத்தி சக்சஸ் பார்ட்டி

அயோத்தி சக்சஸ் பார்ட்டி

இதனையடுத்து அயோத்தி படத்தின் சக்சஸ் பார்ட்டியை படக்குழுவினர் கொண்டாடினர். இதில் சசிகுமார், இயக்குநர் மந்திரமூர்த்தி, தயாரிப்பாளர் ரவீந்திரன், புகழ் உட்பட படக்குழுவினரும் கலந்துகொண்டனர். அப்போது தயாரிப்பாளர் ரவீந்தருக்கும், இயக்குநர் மந்திரகுமாருக்கும் தங்கச் செயின் ஒன்றை பரிசாக வழங்கினார் சசிகுமார். மேலும், கேக் வெட்டியும் இந்த வெற்றியை கொண்டாடியுள்ளனர். அயோத்தி படத்தின் சக்சஸ் மீட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 கதை இதுதான்

கதை இதுதான்

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரும் ஒரு குடும்பத்தினர் விபத்தில் சிக்கிக்கொள்ள, அப்போது ஒருவர் உயிரிழந்துவிடுகிறார். அவரின் சடலத்தை அயோத்தி கொண்டு செல்வதற்கு சசிகுமாரும் புகழும் உதவ முடிவு செய்கின்றனர். அவர்கள் நினைத்தபடி அந்த குடும்பத்தினருக்கு உதவ முடிந்ததா என்பது தான் கதை. பல தடைகளை கடந்து சசிகுமாரும் புகழும் உதவி செய்வது தான் அயோத்தி படத்தின் கதை. இதில், அப்துல் மாலிக் என்ற கேரக்டரில் நடித்துள்ளார் சசிகுமார்.

 சர்ச்சைகளை கடந்து வெற்றி

சர்ச்சைகளை கடந்து வெற்றி

தமிழ்நாட்டில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவான இந்தப் படத்தை மந்திரமூர்த்தி இயக்கினார். முக்கியமாக அயோத்தி படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர்கள் மாதவராஜ் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் படத்தில் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன், இயக்குநர் மந்திரமூர்த்தி, துணை இயக்குநர் ஸ்ரீதர் ஆகியோருடன் மாதவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அங்கீகாரம் கொடுக்கப்படும்

அங்கீகாரம் கொடுக்கப்படும்

அப்போது அயோத்தி படத்தின் கதை குறித்து எழுத்தாளர் மாதவராஜ் விளக்கம் கொடுத்தார். அதேபோல் இயக்குநர் மந்திர மூர்த்தியும் மாதவராஜ்ஜிடம் படம் உருவானது குறித்து விவரித்துள்ளார். இறுதியாக அயோத்தி OTT தளத்தில் வெளியாகும்போது, நிஜத்தில் உதவிய பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கம், அதன் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமார், சுரேஷ் பாபு ஆகியோருக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

 படக்குழுவினர் உறுதி

படக்குழுவினர் உறுதி

தயாரிப்பாளர் ரவீந்திரனும், இயக்குநர் மந்திரமூர்த்தியும் உறுதி கொடுத்ததால் கதை திருட்டு சர்ச்சையும் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இந்த பிரச்சினையில் ஆதரவளித்த, துணைநின்ற அத்தனை பேருக்கும் நன்றி. நம்பிக்கைகள் நனவாக வேண்டும் என மாதவராஜ்ஜும் கூறியிருந்தார். அயோத்தி கதை திருட்டு பஞ்சாயத்து ஒருவழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து, தற்போது சக்சஸ் மீட்டிங்கும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X