தேசிய விருது கிடைத்த கையோடு சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திய நடிகர்
மும்பை: தேசிய விருது வென்ற பிறகு ஆயுஷ்மான் குரானா விளம்பர படங்களில் நடிப்பதற்கான சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டாராம்.
அந்தாதுன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த படத்தில் அவர் பார்வையற்ற இசைக் கலைஞராக நடித்து அசத்தினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. தற்போது அந்த படத்தை தமிழில் பிரசாந்தை வைத்து ரீமேக் செய்கிறார்கள்.

தேசிய விருது கிடைத்த பிறகு ஆயுஷ்மான் குரானா சம்பள விஷயத்தில் கறாராக உள்ளாராம். அவர் தற்போது விளம்பர படம் ஒன்றில் நடிக்க ரூ. 3.5 கோடி கேட்கிறாராம். அதற்கு குறைவாக கொடுத்தால் நடிக்க முடியாது என்று தெரிவிக்கிறாராம்.
தேசிய விருது பெறும் முன்பு விளம்பர படம் ஒன்றில் நடிக்க ரூ. 90 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை வாங்கி வந்தார் ஆயுஷ்மான். தேசிய விருதுகள் அறிவித்த பிறகு அவர் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார்.
அந்த விளம்பரத்தை மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களா ஒன்றில் ஷூட் செய்துள்ளனர். அந்த விளம்பர படத்தில் நடிக்க அவர் ரூ. 3.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம். ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருவதால் அவர் கேட்கும் சம்பளத்தை கொடுத்தார்களாம். விளம்பர படங்களுக்கே இப்படி ஒரேயடியாக உயர்த்தியுள்ளார் என்றால் படங்களுக்கு சொல்லவா வேண்டும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
ஆயுஷ்மான் குரானா ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் ட்ரீம் கேர்ள் என்ற படத்தில் நடித்துள்ளார். அதில் அவர் பெண் வேடமிட்டுள்ளார். ட்ரீம் கேர்ள் படம் வரும் செப்டம்பர் மாதம் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது. ஆயுஷ்மான் பெண் வேடமிட்டுள்ளதாலேயே இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்பின் முதல் நாள் அன்று சேலை உடுத்த பயந்ததாகவும், அதன் பிறகு பழகிவிட்டதாகவும் ஆயுஷ்மான் தெரிவித்துள்ளார். அவர் தன் படங்களில் 50, 100 பேரை தூக்கிப் போட்டு அடிப்பது இல்லை, பன்ச் வசனம் பேசுவது இல்லை, தனது வித்தியாசமான கதாபாத்திரங்களால் ரசிகர்களை ஈர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











