அப்பா, மகன், மருமகள்.. ஆத்தாடி அந்த பிரபல ஹீரோவா இது..? நம்பவே முடியலையே..? வைரலாகும் புகைப்படம்!
மும்பை: பிரபல ஹீரோ பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை நடிகராக இருந்து சினிமாவில் ஹீரோவானவர்களில் ஒருவர், இந்தி நடிகர் ஆயுஷ்மன் குரானா.
சூஜித் சிர்கார் இக்கிய 'விக்கி டோனர்' மூலம் நாயகனாக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே சர்ச்சைக்குரிய கேரக்டரில் நடித்து பிரபலமானார்.

அந்தாதுன்
இந்தப் படத்தில் அவர் உயிரணு தானம் செய்பவராக நடித்திருந்தார். இந்தப் படம் தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில், தாராளபிரபு என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதையடுத்து மேலும் சில படங்களில் நடித்த இவர், ஶ்ரீராம் ராகவன் இயக்கிய அந்தாதுன் படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். தபு, ராதிகா ஆப்தே உட்பட பலர் நடித்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இது தமிழில், பிரஷாந்த் நடிப்பில் ரீமேக் ஆக இருக்கிறது.

பதாய் ஹோ
இவர் அடுத்து அமித் சர்மா இயக்கத்தில் நடித்த பதாய் ஹோ படமும் ஹிட்டானது. இதில் நீனா குப்தா, கஜராஜ் ராவ், சான்யா மல்ஹோத்ரா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு வெளியான ஆர்டிகிள் 15, ட்ரீம் கேர்ள், பாலா ஆகிய படங்களும் கவனிக்கப்பட்டன. ஒருபால் ஈர்ப்பாளராக இவர் நடித்த சுப்மங்கள் ஸ்யாதா சாவ்தன் படம் வெளியாகி பரபரப்பாக ஓடிகொண்டிருந்தபோதுதான் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.
குலாபோ சிதாபோ
இதையடுத்து அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த குலாபோ சிதாபோ (Gulabo Sitabo) படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அப்பா, மகன், மகனின் மனைவி ஆகிய 3 கேரக்டர்களில் இவர் நடித்துள்ள படம் வைரலாகி வருகிறது. ஆனால், இது சினிமாவல்ல. விளம்பர படம். வெள்ளை சல்வார் காமிஸ் அணிந்து, லிப்ஸ்டிக்குடன் ஆயுஷ்மன் வருவதை பார்க்கும்போது நம்ப முடியவில்லை.

விளம்பர தூதர்
அவர்தானா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இந்த விளம்பர வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள ஆயுஷ்மன் குரானா, டைட் நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதில் அந்த மூன்று பேருமே நான்தான். இந்த விளம்பரத்தை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











