வருண் தவானுக்கு ஆயுஷ்மான் குரானா சவால்..மூச்சுவிடாமல் வசனம்..மிரண்டுபோன ரசிகர்கள் !

மும்பை: ஆயுஷ்மான் குரானா தனது நண்பர் வருண் தவானுக்கு மூச்சுவிடாமல் வசனம் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசங்களையும் சிறந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வருபவர் ஆயுஷ்மான் குரானா..

இவர் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்த குலாபோ சிதாபோ படத்தின் டிரைய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இந்தப் படம் இன்னும் ஓரிரு நாட்களில் டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியாக உள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

பாலிவுட் திரையுலகின் முன்னணி சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்து வரும் குலாபோ சிதாபோ என்ற படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதில் அமிதாப் பச்சன் ஒரு பழைய மேன்ஷன் ஓனராகவும் ஆயுஷ்மான் அதில் குடியிருக்கும் வாடகைதாரராகவும் நடித்துள்ள இந்த படம் காமெடி கலந்த டிரைலராக வெளியான நிலையில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கி அதை வரும் ஜூன் 12ஆம் தேதி வெளியிட உள்ளது.

வருண் தவான் சவால்

வருண் தவான் சவால்

இந்த படத்திற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போக இப்போது அந்தப் படத்தை மையமாகக் கொண்ட ஒரு சவால் ஒன்றை ஆயுஷ்மான் தன்னுடைய திரையுலக நண்பர்களாகிய வருண் தவான், டாப்ஸி மற்றும் கரண் ஜோகர் போன்றோருக்கு விடுத்துள்ளார்.

மூச்சுவிடாமல்

மூச்சுவிடாமல்

அந்த சவால் என்ன வென்றால், ஆயுஷ்மான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்து வெளியாக உள்ள குலாபோ சிதாபோ படத்தை பற்றிய ஒரு டங்க் ட்விஸ்டரை மூச்சுவிடாமல் வசனம் பேசி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார் ஆயுஷ்மான். மேலும், தனது நண்பரான வருண் தவான், டாப்ஸி, கரண் ஜோகர் போன்றோரிடம் இந்த டங்க் ட்விஸ்டரை செய்து காட்டும்படி ஆக்ரோஷமாக சவால் விடுத்துள்ளார். இந்த படம் வெளியாக ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இவர் விடுத்துள்ள இந்த சவால் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.அந்த வசனத்தை கேட்ட ரசிகர்கள் அவரை பார்த்துமிரண்டு போய் உள்ளனர்

செய்து காட்டுகிறேன்

செய்து காட்டுகிறேன்

அந்த சவாலை ஏற்ற வருண் தவான் நான் இதை செய்து காட்டுகிறேன் என்ற தோணியில் 'லெட் மி ரைட் திஸ் டவுன்' என அந்தப் பதிவிற்கு பதில் அளித்துள்ளார். சமீபத்தில் மலையாள நடிகர் டோவினோவிற்க்கு வில்லன் நடிகர் அபு சலீம் உடற்பயிற்சி சவால் விட்டது போல இப்போது ஆயுஷ்மான் வாய் பயிற்சி என்ற டங்க் ட்விஸ்டர் சவாலை தனது நண்பர்களாகிய வருண் தவான், டாப்ஸி, மற்றும் கரண் ஜோகருக்கு விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழில் ரீமேக்

தமிழில் ரீமேக்

ஆயுஷ்மான் இந்தியில் நடித்த ஆர்டிகல் 15 என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகும் அதை கனா படத்தை இயக்கிய இயக்குனர் அருண்ராஜ் காமராஜா இயக்குவதாகவும் சில பேச்சுக்கள் கோலிவுட் வட்டாரத்தில் சுற்றி வருகின்றன. இந்த படம் ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஆயுஷ்மான் தனது சிறந்த நடிப்பை அதில் வெளிப்படுத்தியிருப்பார். எனவே தமிழில் இதை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் ஆயுஷ்மான் நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X