படத்துல அந்த மாதிரி மேட்டராம்... தேசிய விருது பெற்ற ஹீரோ படத்துக்கு தடை விதித்தது துபாய்!

By

Recommended Video

Shubh Mangal zyada saavdhan Trailer Review | Ayushmann Khuranna

மும்பை: தேசிய விருது பெற்ற நடிகரின் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.

இந்தியில், விக்கி டோனர், துமாரி சுலு, அந்தாதுன், பதாய் ஹோ, ஆர்டிகிள் 15 உட்பட பல ஹிட் படங்களில் நடித்திருப்பவர் அயுஷ்மன் குரானா.

அந்தாதுன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருதை பெற்றவர் அயுஷ்மன் குரானா. இவர் இப்போது நடித்துள்ள படம், 'சுப் மங்கல் ஜ்யாதா சாவ்தான்' (Shubh Mangal Zyada Saavdhan).

முத்தக்காட்சி

முத்தக்காட்சி

இதில் ஜிதேந்திர குமார், கஜ்ராஜ் ரவ், நீனா குப்தா, மனுரிஷி சத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டிரைலர் கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதை. இவர்களை பற்றி பேசும் முதல் இந்தி படம் இது என்று கூறப்படுகிறது. இதன் டிரைலரில் அயுஷ்மன் குரானாவும் ஜிதேந்திர குமாரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி இடம்பெற்றிருந்தது.

படத்துக்குத் தடை

படத்துக்குத் தடை

இந்தக் காட்சிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களும் வைக்கப்பட்டன. இந்நிலையில் இந்தப் படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தி படங்களுக்கு வரவேற்பு உள்ளது. எந்த இந்தி படம் ரிலீஸ் ஆனாலும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆவது வழக்கம். ஆனால், ஆயுஷ்மன் குரானா நடித்துள்ள இந்தப் படத்துக்கு துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தடை விதித்துள்ளது.

நீக்கி விடுகிறோம்

நீக்கி விடுகிறோம்

இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய கதை என்பதால் அனுமதிக்க முடியாது. படத்துக்கு தடை விதிக்கிறோம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து படத்தின் தயாரிப்பாளர்கள், அந்நாட்டுத் தணிக்கைத் துறையிடம், அயுஷ்மன் குரானா மற்றும் ஜிதேந்திர குமாரின் முத்தக் காட்சிகளை நீக்கி விடுகிறோம். பிறகு ரிலீஸ் செய்ய அனுமதிக்க முடியுமா? என்று கோரிக்கை வைத்தனர்.

அனுமதிக்க முடியாது

அனுமதிக்க முடியாது

ஆனால், இது ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றிய படம் என்பதால் படத்தை வெளியிட அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் இந்த படம் அந்த நாடுகளில் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன், இது எனக்கு முக்கியமான படம். இப்படியொரு படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று நடிகர் அயுஷ்மன் குரானா கூறியிருந்தார்.

More from Filmibeat

Read more about: ban தடை bollywood
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X