அட்லீ தான் வேணும்.. அடம்பிடிக்கும் அந்த பாலிவுட் நடிகர்.. அப்போ கடைசி வரை விஜய் கூட படம் கிடையாதா?

சென்னை: ஷாருக்கானை வைத்து அட்லீ பண்ண பெரிய சம்பவம் காரணமாக 5 நாட்களில் 600 கோடி வசூலை ஜவான் எட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திங்கட்கிழமையான நேற்றும் சுமார் 80 கோடி அளவுக்கு உலகம் முழுவதும் வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீக்கிரமே அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஷாருக்கானின் பட நிறுவனமே அறிவித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படி ஒரு தரமான சம்பவத்தை செய்த இயக்குநர் அட்லீயை பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் கொத்தி தூக்க காத்திருக்கின்றனர் என்கின்ற பரபரப்பான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

Ayushmann Khurrana wish to work Jawan Director Atlee soon

அட்லீயுடன் ஆயுஷ்மான் குரானா இணைய விருப்பம்: இயக்குநர் அட்லீ அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து படம் பண்ண போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் படத்தை முடித்துவிட்டு நடிகர் விஜய்யை அட்லீ இயக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்குள் சில பாலிவுட் நடிகர்கள் அட்லீக்கு பெரிய சம்பளத்தை கொடுத்து அழைக்காத தூக்கி விடுவார்களோ என்கிற அச்சமும் கோலிவுட்டில் எழுந்துள்ளது அதற்குக் காரணமே இளம் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா தான் என்கின்றனர்.

விக்கி டோனர், அந்தாதுன், ஆர்டிகல் 15, பாலா, டாக்டர் ஜி, ட்ரீம் கேர்ள் 2 என சிறப்பான படங்களை கொடுத்து பாலிவுட்டின் வசூல் மன்னனாக வலம் வரும் இளம் நடிகர் ஆயுஷ்மான் குரானா இயக்குநர் அட்லீயை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாக அவருடன் இணைந்து பணியாற்ற விருப்பமாக உள்ளதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அட்லீயும் பகத் ஃபாசிலும் பிடிக்கும்: தென்னிந்திய சினிமாத் துறையில் பல ஜாம்பவான்கள் உள்ளார்கள் அதில் எனக்கு அட்லீ மற்றும் பகத் பாஸில் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கூடிய சீக்கிரமே அட்லீக்கு ஆயுஷ்மான் குரானா பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து புக் செய்து விடுவாரா என்கிற பேச்சுக்களும் அடிப்பட தொடங்கியுள்ளன.

Ayushmann Khurrana wish to work Jawan Director Atlee soon

விஜய் - அட்லீ படம் அவ்ளோதானா: சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் தலைவர் 171 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட நிலையில், விஜய் - அட்லீ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்கின்றனர்.

மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதிதான் வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில், இன்னும் ஒரு வருஷம் அட்லீ அல்லு அர்ஜுன் படத்திற்காக காத்திருப்பாரா அல்லது இமிடியேட்டா ஒரு புதிய படத்தை ஆரம்பிப்பாரா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கூடிய விரைவில் இதற்கு அட்லீயிடம் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X