Meera Nandan: அய்யனார் பட நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: அய்யனார் பட நடிகை மீரா நந்தனுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

மலையாளத் திரைப்பட நடிகையான மீரா நந்தன், முல்லா என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார்.

ayyanar movie actress meera nandan got engagement to sreeju

அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்த மீரா நந்தன் தமிழில் வால்மீகி படத்தில் நடித்தார்.

நடிகை மீரா நந்தன்: தமிழில் வால்மிகி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர், தொடர்ந்து நடிகர் ஆதிக்கு ஜோடியாக அய்யனார், சரத்குமாருடன் சண்ட மாருதம் மற்றும் காதலுக்கு மரணமில்லை, நேர்முகம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

ayyanar movie actress meera nandan got engagement to sreeju

லண்டன் தொழில் அதிபர்: இந்நிலையில், நடிகை மீரா நந்தனுக்கு திடீரென நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மீரா நந்தனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை தேடி வந்த நிலையில், திருமண தகவல் மையம் மூலம் லண்டனில் தொழிலதிபராக இருக்கும் ஸ்ரீஜு என்பவரை பார்த்துள்ளனர்.

ayyanar movie actress meera nandan got engagement to sreeju

நிச்சயதார்த்தம்: மீரா நந்தனும், ஸ்ரீஜும் துபாயில் சந்தித்து பேசி உள்ளனர். மீரா நந்தனுக்கும் ஸ்ரீஜுவை பிடித்துப்போக திருமணத்திற்கு ஓகே சொல்லி உள்ளார். இதையடுத்து மீரா நந்தன், ஸ்ரீஜு திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடந்தது. நிச்சயதார்த்த புகைப்படங்களை மீரா நந்தன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ayyanar movie actress meera nandan got engagement to sreeju

அதிரடியான பதில்: நடிகை மீரா நந்தன், துபாயில் வணிக வளாகம் ஒன்றின் இரவு ஷாப்பிங் விழா குறித்து விளம்பர வீடியோவில் நடித்திருந்தார். இதில் அவர் முறையான ஆடை அணியவில்லை என்று கூறி சிலர் அவருக்கு எதிராக மோசமான கருத்துகளைத் தெரிவித்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சைபர் தாக்குதலுக்கு எதிராகவும் மீரா நந்தனுக்கு ஆதரவாகவும் மலையாள நடிகர், நடிகைகள் பலர் கருத்து தெரிவித்தனர். 'எப்படி உடை அணிய வேண்டும் என்பதை மற்றவர்கள் சொல்லித்தர வேண்டாம்'என்று நடிகை மீரா நந்தன் அதிரடியாக பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X