அருண்-பூஜா நடிக்கும் அய்யனார் வீதி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பிக்சர்சுக்காக டி.ராஜ்கமல், ஆர்.ராமசெல்வம், அன்பு, பாட்ஷா தயாரிக்கும் படம், 'அய்யனார் வீதி'. ஆர்.பாஸ்கரன் இயக்குகிறார்.
இந்த படத்திற்கான பட பூஜை ஏவிஎம் ஸ்டூடியோவில் சென்னை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது.
இதில் படக் குழுவினரும் சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்றனர்.

அய்யனார் ஆகிறார்…
படத்தைப் பற்றி கூறிய இயக்குனர் R .பாஸ்கரன், இது ‘கமர்சியல் கலந்த படம் என்றார். ஒரு ஐயர், அய்யனார் ஆக மாறும் கதை இது என்றும் கூறினார்.

நகைச்சுவை திரைப்படம்
புதிய முயற்சிகளுடன் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கிராமத்து வாசனை கலந்த நகைச்சுவையுடன், குடும்பச்சித்திரமாக கூடிய படமாக இருக்கும்.." என்கிறார் இயக்குநர்.

புதுமுகங்கள் நடிக்க
படத்தின் கதாநாயகனாக புதுமுகம் அறிமுகம் அருண் , கதாநாயகியாக பூஜா. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கும்கியில் நடித்த ஜோ மல்லுரி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தாஸ் அறிமுகமாகிறார்

முன்னணி நட்சத்திரங்கள்
இவர்களுடன் மீரா கிருஷ்ணன் ,ஸ்டில்ஸ் குமார் ,நெல்லை சிவா , ஜிப்சி ராஜ்குமார் , அன்பு ,பாட்ஷா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள்நடிக்கின்றனர்.

திருநெல்வேலியை சுற்றி
இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் நடைபெற்று வருகிறது. சண்டைக்காட்சிகளும் புதுமையான சேஸிங்காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

இசை யு.கே. முரளி
இசையமப்பாளர் U .K முரளி இசையில் அற்புதமான 5 பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தொழில் நுட்பக்கலைஞர்கள்
கதை- திரைக்கதை- வசனம்- இயக்கம் : R .பாஸ்கரன், ஒளிப்பதிவு : S .ஆதி, பாடல்கள் : பிரியன், எடிட்டிங் : நிர்மல்நடனம் : சதீஷ், ஆக்ஷன் : M.K. லீ,மக்கள் தொடர்பு : S செல்வரகு, தயாரிப்பாளர் : T. ராஜ் கமல்,R. ராமசெல்வம்,இணை தயாரிப்பு : அன்பு ,பாட்ஷா பாய்


Click it and Unblock the Notifications











