தீவிர சிகிச்சை.. பிரபல இயக்குனர் தொடர்ந்து கவலைக்கிடம்.. உதவ முன்வந்த நடிகர்கள், இயக்குனர்கள்!

By

திரிச்சூர்: தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனருக்கு உதவ, நடிகர் பிருத்விராஜ் உள்ளிட்டவர்கள் முன் வந்துள்ளனர்.

Recommended Video

Ayyappanum Koshiyum director Sachy Hospitalized | Cardiac Arrest

பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், அய்யப்பனும் கோஷியும்.

இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

ஈகோ மோதல்

ஈகோ மோதல்

ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். அதிகாரப் பின்னணி கொண்ட ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் இந்தப் படத்தின் கதை. படத்தை அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தனர். இதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம்.

டிரைவிங் லைசன்ஸ்

டிரைவிங் லைசன்ஸ்

இவர் சேது என்பவருடன் இணைந்து படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிவந்தார். பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனியாக ஸ்கிரிப்ட் எழுதினார். ராம்லீலா, டிரைவிங் லைசன்ஸ் உட்பட சில படங்களுக்கு எழுதினார். இதில், பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடித்திருந்த டிரைவிங் லைசன்ஸ் கவனிக்கப்பட்டது. ஏற்கனவே அனார்கலி என்ற படத்தை இயக்கிய சச்சி, அடுத்து அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கினார்.

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை

இது வரவேற்பை பெற்றது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் சச்சிக்கு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்த சில மணி நேரங்களில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் ஜூபிளி மிஷன் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கவலைக்கிடம்

கவலைக்கிடம்

மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் சீராக இல்லை என்பதால், தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை செய்வது தொடர்பாக, நடிகர்கள் பிருத்விராஜ், பிஜு மேனன், இயக்குனர்கள் ரஞ்சித், உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட சினிமா நண்பர்கள் ஆலோசித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் அல்லது விமானம் மூலமாக அவரை வேறு மருத்துவமனைக்கும் மாற்றி சிகிச்சை செய்யவும் யோசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X