தமிழில் ரீமேக் ஆகிறது மலையாள அய்யப்பனும் கோஷியும்...பிருத்விராஜ் கேரக்டரில் நடிக்கிறாரா பிரபல ஹீரோ?
சென்னை: மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
பிருத்விராஜ், பிஜு மேனன் நடித்து கடந்த மாதம் ரிலீஸ் ஆன மலையாள படம், அய்யப்பனும் கோஷியும்.
சச்சி இயக்கி இருந்த இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

ஈகோ மோதல்
ரஞ்சித், கவுரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கேரளாவில் பலத்த வரவேற்பை பெற்றது. அதிகாரப் பின்னணி ஒருவனுக்கும் ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல்தான் இந்தப் படத்தின் கதை. படத்தை எவ்வளவு இயல்பாக கொடுக்க முடியுமோ, அவ்வளவு யதார்த்தமாக எடுத்திருந்தார்கள்.

போலீஸ் சோதனை
அட்டப்பாடி வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்க தடை இருக்கிறது. அதை மீறி, அங்கிருந்து மதுபாட்டில்களும் ஊட்டி செல்லும் வழியில் போலீஸ் பரிசோதனையில் சப் இன்ஸ்பெக்டர் பிஜூ மேனனிடன் சிக்கிக் கொள்கிறார் பிருத்விராஜ். முன்னாள் ராணுவ வீரரான பிருத்வி, போலீஸை அடிக்கப் பாய, பிஜூவுக்கும் ஈகோ வெளிப்படுகிறது. பிறகு அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை சொல்லும் படம் இது.

களக்காத்த சந்தனமேரம்
இதில் இடம்பெற்றிருந்த, களக்காத்த சந்தனமேரம் வெகுவேகா பூத்திருக்கு (கிழக்கே சந்தனமரம் பூத்திருக்கு. அதை நாமும் பறிச்சுகிட்டு ஏரோபிளைனை பார்ப்போமா? ) என்ற பாடல் பட்டி தொட்டிங்கும் பரவல் ஹிட். யூடியூப், ஃபேஸ்புக், டிக் டாக் என சமூக வலைதளங்களில் கன்னாபின்னா வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை நஞ்சம்மா என்ற பழங்குடியின பெண் பாடியிருந்தார்.

பைவ்ஸ்டார் கதிரேசன்
இந்நிலையில், இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை, தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். இவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் உள்ளார்.

பேச்சுவார்த்தை
இதில் யார் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. பிருத்விராஜ் கேரக்டரில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. கதிரேசன் தயாரித்துள்ள பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் தனுஷ் நடித்துள்ளதால், இதிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. லாரன்ஸ் நடிக்கும் படத்தையும் கதிரேசன் தயாரிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











