வைரமுத்துவை பாராட்டிய ரஜினிகாந்த்.. சின்மயி இப்படி ஒரு ரியாக்‌ஷனை கொடுத்துட்டாங்களே.. என்ன தெரியுமா?

சென்னை: கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது வழங்கப்பட்டிருக்கிறது. 24 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பலரும் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த்தும் எக்ஸ் பக்கத்தில் கவிப்பேரரசுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். இந்நிலையில் பின்னணி பாடகி சின்மயி; ரஜினி வாழ்த்து தெரிவித்ததற்கு தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. இளையராஜா இசையில் முதன்முதலாக பாடல் எழுத ஆரம்பித்த அவர்; ஞானியுடன் சேர்ந்து ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இளையராஜா - வைரமுத்து- பாரதிராஜா, இளையராஜா - வைரமுத்து- பாலசந்தர் கூட்டணி பல மேஜிக்குகளை திரையிலும், செவியிலும் நிகழ்த்தியிருக்கிறது. இளையராஜாவுடன் நல்லபடியாக போய்க்கொண்டிருந்த நட்பு; திடீரென முறிந்துவிட; ராஜாவின் கோட்டையிலிருந்து வெளியே வந்தார் கவிப்பேரரசு.

Ayyo Puriyave Puriyatha Chinmayi s Reaction to Rajinikanth s Wish for Vairamuthu Goes Viral
Photo Credit:

வைரமுத்துவின் அடுத்தக்கட்டம்: இளையராஜாவை பிரிந்த அவர் அடுத்ததாக தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் என பல இசையமைப்பாளர்கள் இசையில் பணியாற்றினார். முக்கியமாக ரஹ்மான் - வைரமுத்து - மணிரத்னம் கூட்டணி தமிழ் திரையிசை பாடல்களில் நிறைய புதுமைகளை செய்தது. அதன் காரணமாக 90களில் மோஸ்ட் சக்சஸ்ஃபுல் கூட்டணியாக வலம் வந்தது. இந்த கூட்டணியின்போதுதான் வைரமுத்து சில தேசிய விருதுகளையும் தொடர்ச்சியாக அள்ளினார்.

இதிலும் பிரச்னை: ஆனால் சில பிரச்னைகள் காரணமாக இந்தக் கூட்டணியும் உடைந்தே போனது. வைரமுத்துவுக்கு பதிலாக வேறு பாடலாசிரியர்களை மணியும், ரஹ்மானும் பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் வைரமுத்துவுடன் இருந்தபோது நிகழ்ந்த பரவசம் இப்போது இல்லை என்பதே அனைவரது கருத்தும். ரஹ்மான் மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களும் பழையபடி அவருடன் அதிகம் பணியாற்றுவதில்லை. ஆனால் தமிழ் சினிமா பாடல்களின் நிலைமை ஐசியூவில் இருக்கும் இந்த நேரத்தில் வைரமுத்து கண்டிப்பாக தேவை என பலரும் ஆசைப்படுகிறார்கள்.

Also Read
ரஜினியை வம்பிழுத்த தவெக.. அந்த வார்த்தையை சொல்லி விளாசிய ஜெயிலர் பிரபலம்.. விஜய்க்கு சுற்றிலும் அடி
ரஜினியை வம்பிழுத்த தவெக.. அந்த வார்த்தையை சொல்லி விளாசிய ஜெயிலர் பிரபலம்.. விஜய்க்கு சுற்றிலும் அடி

ஞானபீட விருது: பாடல்கள் மட்டுமின்றி கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்,மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட நாவல்களையும் படைத்திருக்கிறார். ஆயிரத்தொரு பாடல்கள் என்ற புத்தகத்தையும் விரைவில் வெளியிடவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் அகிலன் (1975), ஜெயகாந்தன் (2002) ஆகியோருக்கு மட்டும் இந்த விருது கிடைத்திருக்கிறது. தற்போது 24 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கிடைத்திருப்பது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே அவருக்கு தங்களது வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவித்துவருகிறார்கள்.

ரஜினியின் ட்வீட்; சின்மயி ரியாக்‌ஷன்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது எக்ஸ் பக்கத்தில், "நம் இந்திய நாட்டின் பெரும் மதிப்புமிக்க ஞானபீட விருதை பெற்றிருக்கும் எனது அருமை நண்பர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருந்தார். அதனை ரீ ட்வீட் செய்த சின்மயில், "அய்யோ புரியவே புரியாதா" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. யார் வைரமுத்துவை பாராட்டினாலும் கரெக்ட்டாக அங்கே சின்மயி ஆஜராகிவிடுகிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

முன்னதாக இன்னொரு ட்வீட்டில், "2018ஆம் ஆண்டு பல பெண்கள் ஒரே கவிஞர் - பாடலாசிரியர் மீது குற்றஞ்சாட்டினார்கள். இன்று அந்த மனிதருக்கே ஞானபீட விருது வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் ஜெயகாந்த்தனுக்கு பிறகு. ஜெயகாந்தன் தன்னை பாராட்டியதாக வைரமுத்து வெளியிட்ட கடிதம் போலி என ஜெயகாந்தன் மகளே கூறியிருக்கிறார். ஓஎன்வி குரூப் பெயரில் வழங்கப்படும் விருதுக்கு கேரளாவில் இருந்து ஒரு குழு அவரை தேர்வு செய்தது. ஆனால் அந்த முடிவை கைவிட்டுவிட்டது. ஏனெனில் குரூப் பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாது என நீதிக்காக குரல் எழுப்பியவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர் மீது குற்றஞ்சாட்டிய பெண்களின் குரல்கள் அமைதியாக்கப்பட்டுவிட்டன. நான் மிகப்பெரிய விலையை கொடுத்திருக்கிறேன்" என தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X