Don't Miss!
- News
பெரிய அழுத்தம் வரப்போகிறது.. எடப்பாடிக்கு மட்டும் "அப்படி" நடந்தால் கேம் ஓவர்.. எச்சரிக்கும் புள்ளி
- Finance
RBI இலக்கை எட்டிய பணவீக்கம்.. அரசின் தீவிர முயற்சி, வட்டி அதிகரிப்பு தான் காரணம்..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க மட்டும் உங்களுக்கு கணவன் & மனைவியா வந்தா? நீங்க பார்ட்டிக்கு போகவே முடியாதாம்!
- Automobiles
நெதர்லாந்து மக்களின் மூளையே மூளைதான்... சைக்கிள்களை நிறுத்துவதற்கு ரூ.533 கோடியில் பார்க்கிங் பகுதி!!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மக்கு மணிக்கு முட்டுக் கொடுத்த அசீம்... உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?: நெட்டிசன்கள் ட்ரோல்
சென்னை:
பிக்
பாஸ்
சீசன்
6
நிகழ்ச்சியில்
இருந்து
இதுவரை
12
பேர்
வெளியேறிவிட்டனர்.
மீதமிருக்கும்
9
பேருடன்
தொடங்கிய
இந்த
வாரம்
பிக்
பாஸ்
நிகழ்ச்சி,
முதல்
3
நாட்கள்
கலகலப்பாக
சென்றது.
அதேநேரம்
இந்த
வாரம்
மணிகண்டன்
தான்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
வெளியேற
வாய்ப்புள்ளதாக
சொல்லப்படுகிறது.
இந்நிலையில்
நேற்றைய
டாஸ்க்கில்
மணிகண்டனும்
அசீமும்
பேவரிசத்துடன்
விளையாடியதை
நெட்டிசன்கள்
ட்ரோல்
செய்து
வருகின்றனர்.
Bigg
Boss
Tamil
6
Eviction:
இந்த
வாரம்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
கிளம்பும்
மணிகண்டன்..
அப்போ
மைனா?

பிக் பாஸ் 12வது வாரம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரை 82 நாட்களை கடந்துவிட்டது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில், தற்போது 9 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருக்கின்றனர். யார் எவிக்சன் என்ற எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த வாரத்தின் அனைத்து டாஸ்க்குகளும் நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டன. முதல் மூன்று நாட்கள் பிரீஸ் - ரிலீஸ் டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கின் நடுவே போட்டியாளர்களின் குடும்பத்தினரும் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து சர்ப்ரைஸ் செய்தனர்.

முட்டுக்கொடுத்த அசீம்
நேற்றைய தினம் பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும், நான் ஏன் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை விட பெஸ்ட் என விளக்கம் கொடுக்க வேண்டும். அதேபோல் தன்னுடன் பைனலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாளரின் பெயரையும் காரணத்துடன் குறிப்பிட வேண்டும். இந்த டாஸ்க்கில் அமுதவாணன், ஏடிகே, விக்ரமன், ரச்சிதா, ஷிவின் ஆகியோர் நியாயமான கருத்துகளை முன்வைத்து விளையாடினர். ஆனால், மணிகண்டனின் கருத்துகள் கேட்கவே காமெடியாக இருந்தது என்றால், அதற்கு அசீம் முட்டுக் கொடுத்தது இன்னும் வேடிக்கையாகிப் போனது.

ட்ரெண்டாகும் மக்கு மணி
தான் ஏன் மற்ற போட்டியாளர்களுடன் பெஸ்ட் என்ற விளக்கம் சொன்ன மணி, விக்ரமன் பெண்களுக்கு மட்டுமே குரல் கொடுத்தார், அவர் கண்களுக்கு ஆண்கள் பிரச்சினை தெரியவில்லை என்றார். அதேபோல் நான் தான் மற்ற போட்டியாளர்களுக்கு பிரச்சினை ஏற்படும் போதெல்லாம் ஆதரவாக நின்று பேசியதாக செம்ம உருட்டு உருட்டினார். இதில் மிகப்பெரிய கொடுமையே அசீம் இதனை ஆதரித்து மணிகண்டனுக்கு ஆமாம் சாமி போட்டது தான். அதேபோல், பைனலில் தன்னுடன் இவர் தான் வருவார் என மணிகண்டன் அசீமையும், அசீம் மணிகண்டனையும் மாறி மாறி கூறிக் கொண்டனர். இதனை பார்த்த நெட்டிசன்கள் 'மக்கு மணி' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சில்றை பையன் அசீம்
மணி குறித்து டிவிட்டரில் விமர்சனம் செய்து வரும் நெட்டிசன்கள், இந்த சீசனின் மிகப் பெரிய வன்ம குடோன் மணி தான். இத்தனை சீசனும் அசீம்க்கு சொம்படிச்சே பிக் பாஸ் வீட்டில் இருந்துவிட்டான். அதேமாதிரி அசீம்க்கு நான் மிகப் பெரிய ஃபேன் என மணிகண்டன் சொன்னதையும் நெட்டிசன்கள் செம்மையாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், அசீமும் தனது சுயநலத்துக்காக மணிகண்டனை பக்க வாத்தியமாக பயன்படுத்திக் கொண்டதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். முக்கியமாக பைனலுக்கு மணிகண்டன் வருவார் என அசீம் சொன்னது, கடுமையாக ட்ரோலாகி வருகிறது. மணிகண்டன் பைனலுக்கு வருவார் என அசீம் நம்பிக்கையோடு இருக்க, இந்த வாரம் அதே மணிகண்டன் தான் எவிக்சன் என்ற செய்தியும் தற்போது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.