Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்ற அசீம்.. மக்கள் நாயகன்!
சென்னை: பிக் பாஸ் டைட்டிலுக்கு இங்கு இருப்பவர்களில் யாருக்கு தகுதியே இல்லை என நினைக்கிறீங்க என கமல் கேட்டதும் ஹவுஸ்மேட்ஸில் அதிகமானோர் அசீம் தான் எனக் கூறினர்.
ஆரம்பத்தில் இருந்தே பலமுறை ரெட் கார்டுகள் கொடுக்கப்படும் என கமல்ஹாசனே எச்சரித்த நிலையில், அதிரடியாக தனது கேமை ஆடி பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டிலை தட்டிச் சென்றுள்ளார் மக்கள் நாயகன் அசீம் என்கிற ஹாட் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்ரமன் ரன்னர் அப் ஆகவும் ஷிவின் செகண்ட் ரன்னர் அப் ஆகவும் ஆகி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பிக் பாஸ் 6 கிராண்ட் ஃபினாலே LIVE: பிக் பாஸ் சீசன் 6 வெற்றி மகுடம் சூடியது யார்?

டைட்டில் வின்னர் அசீம்
பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி உள்ளார் என்கிற ஹாட்டான தகவல்கள் சற்று முன் லீக் ஆகி விட்டன. விக்ரமன் அல்லது அசீம் இருவரில் யார் டைட்டில் வெல்வார் என கடந்த ஒரு வாரமாக பெரும் போட்டியே நிலவி வந்த நிலையில், அசீம் அசால்ட்டாக டைட்டிலை தட்டித் தூக்கி உள்ளார்.

திருமாவளவன் சப்போர்ட்
விக்ரமனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரடியாக சப்போர்ட் செய்ததற்கு எதிராக வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது ஒரு ரியாலிட்டி ஷோ என்றும் இதில் அரசியல் கலக்கக் கூடாது என்றும் கூறி இருந்தனர்.

கன்ஃபார்ம் பண்ண கமல்
கிராண்ட் ஃபினாலே ப்ரோமோவிலேயே அதனை கன்ஃபார்ம் செய்யும் விதமாக கமல்ஹாசன் இது Biggest Entertaintment Show என உரக்கச் சொல்லி இருந்தார். கடைசி நேரத்தில் அரசியல் ரீதியான சப்போர்ட் கிடைத்த நிலையில், விக்ரமனின் அறம் வெல்லாமல் அசீமின் மக்கள் சப்போர்ட் வென்று விட்டது.

பல வாரங்கள் மறைத்து
அசீமுக்கு சோஷியல் மீடியாவில் வெளியாகும் தனியார் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து அதிக வாக்குகள் கிடைத்து முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால், அவரது விளையாட்டை மேலும் சிறப்பாக்க தொடர்ந்து அவரை கடைசி இடத்தில் உட்கார வைத்து நோகடித்தனர். ஆனால், கடந்த வாரம் அசீம் தான் முதலில் சேவ் ஆன நிலையிலேயே டைட்டிலை அவர் தான் வெல்வார் என்பது உறுதியாகி விட்டது.

செகண்ட் ரன்னர் அப் ஷிவின்
விக்ரமன் அல்லது ஷிவின் வெற்றி பெற வேண்டும் என அசீம் ஹேட்டர்கள் அனைவரும் சொல்லி வந்த நிலையில், ஷிவின் செகண்ட் ரன்னர் அப் ஆக வெளியேறி உள்ளார். விக்ரமன் ரன்னர் அப் ஆக இந்த பிக் பாஸ் சீசன் 6ல் வெற்றி பெறமுடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளார்.

50 லட்சம் பரிசுத் தொகை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6ல் வெற்றி பெற்ற அசீமுக்குத்தான் வெற்றிக் கோப்பை மற்றும் டைட்டில் வின்னருக்கான 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கிடைத்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அசீம் வெற்றி பெற்ற சந்தோஷ தருணத்தை காண இன்றைய கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.