Bigg Boss 7 - கமல் செய்தது தவறுதான்.. பிரதீப்புக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய அசீம்

சென்னை: Bigg Boss Pradeep (பிக்பாஸ் பிரதீப்) பிக்பாஸ் 7ல் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது தவறு என அசீம் தெரிவித்திருக்கிறார்.

பிக்பாஸ் சீசன் 7 ரகளையாக சென்றுகொண்டிருக்கிறது. யாரும் பெரிதான பிரபலம் இல்லாததால் இந்த சீசன் கண்டிப்பாக போர் அடிக்கும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த சூழலில் அதற்கு நேர் மாறாக நடக்கிறது வீட்டில். வினுஷா, விஜய் வர்மா, அனன்யா, பவா செல்லதுரை, யுகேந்திரன் உள்ளிட்டோர் வெளியேறியதை அடுத்து வைல்டு கார்டு எண்ட்ரியாக தினேஷ் , ஆர்.ஜே.பிராவோ, அர்ச்சனா, அன்னபாரதி, கானா பாலா ஆகியோர் சென்றனர்.

Azeem said it was wrong to give red card to Pradeep in Bigg Boss 7

பிரதீப்: சூழல் இப்படி இருக்க இந்த சீசனின் ஹாட் டாபிக்காக இருந்த பிரதீப் மீது ஹவுஸ்மேட்ஸ் பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அதன்படி அவர் வீட்டில் இருந்தால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறியதால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். அடுத்ததாக அன்னபாரதி எலிமினேஷன் செய்யப்பட்டார்.

எதிர்ப்பு: பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதற்கு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துவருகின்றனர். அதிலும் கமல் மீது கடும் விமர்சனத்தை முன் வைக்கின்றனர் நெட்டிசன்கள். முக்கியமாக பிரதீப் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற அடிப்படையில் கமல் முடிவெடுத்திருக்கிறார். ஆனால் வீட்டுக்குள் இருக்கும் நிக்சனும்தான் எல்லை மீறுகிறார்.

அவர் ஏன் இல்லை: ஆனால் அவரை வீட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். கமல் ஹாசன் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் பக்குவமாக நடந்திருக்க வேண்டும். பிரதீப்புக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்திருக்க வேண்டும் என கூறினர். இதற்கிடையே ரெட் கார்டு வாங்கிக்கொண்டு சென்ற பிரதீப் அந்த கார்டுடன் தன் குடும்பத்தினர் நண்பர்களோடு புகைப்படம் எடுத்து கொண்டாடி தக் லைஃப் செய்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

அசீம் பேட்டி: இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னரான அசீம் பிரதீப் விவகாரம் குறித்து அளித்த சமீபத்திய பேட்டியில், "பிரதீப் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கமல் ஹாசன் சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை நான் நியாயமாக பார்க்கவில்லை. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு என்று காரணம் சொல்லி கொடுத்தது தவறு. அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.

வீட்டுக்குள்ளும் சப்போர்ட்: முன்னதாக பிரதீப்புக்கு எதிராக மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ரவீனா உள்ளிட்டோர் குற்றச்சாட்டை முன்வைத்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் விசித்திரா, அர்ச்சனா ஆகியோர் எதற்காக அவருக்கு ரெட் கார்டு கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் வெளியேற்றப்பட்டிருக்கக்கூடாது என்றும் தொடர்ந்து பேசிவருவதும் அதற்கு மாயா கேங் எதிர்ப்பு தெரிவித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X