எச்சைத்துப்பி கொடுப்பேன் சாப்பிடுவியா.. விக்ரமனிடம் எகிறிய அசீம்.. ரொம்ப கேவலமான சண்டை!

சென்னை: என்ன அசீம் இவ்ளோ அமைதியா ஆகிட்டாரேன்னு நினைத்தவர்களுக்கு நான் எல்லாம் திருந்துற ஆளே இல்லை என மீண்டும் தனது சுயரூபத்தை காட்டி உள்ளார் அசீம்.

இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே அசீம் எல்லை மீறி நடந்து கொண்டது பலரையும் அப்செட் ஆக்கியது.

ஷிவினிடம் அவரை போலவே கேவலமாக இமிடேட் செய்ததை கமல்ஹாசனே கண்டித்து இருந்தார். இந்நிலையில், தற்போது எச்சைத் துப்பி கொடுப்பேன் சாப்பிடுவியா என விக்ரமனிடம் எகிறிய பரபரப்பான ப்ரோமோ வெளியாகி உள்ளது.

அதிரடி அசீம்

அதிரடி அசீம்

தொடர்ந்து இந்த வாரமும் ஹவுஸ்மேட்கள் தன்னை நாமினேட் செய்ததால் ரொம்பவே கடுப்பாகி உள்ள அசீம் மீண்டும் தனது சுயரூபத்தை காட்ட ஆரம்பித்துள்ளார். மைனா ஏற்கனவே அசீம் இந்த வாரம் எப்படி கேம் ஆடுகிறார் பார்க்கலாம் என சொல்லி வந்த நிலையில், படைத் தளபதியான அசீம் தனது வன்ம கேமை ஆரம்பித்துள்ளார் என நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

எச்சைத்துப்பி கொடுப்பேன்

எச்சைத்துப்பி கொடுப்பேன்

ராஜகுருவாக விக்ரமன் வேடமிட்டுள்ள நிலையில், நான் என்ன வாயை வாடகைக்கா விட்டுட்டு வந்திருக்கேன் என ஆரம்பிக்கும் அசீம், ராஜகுரு சாப்பாடு, தூன்னு எச்சைத்துப்பி கொடுப்பேன்.. நீங்க வேணா சாப்பிடுங்க என அசீம் வரம்பு மீறி பேச விக்ரமனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

ஏ அவ்ளோ தான்

ஏ அவ்ளோ தான்

சாப்பாட்டில் எச்சைத் துப்பி கொடுப்பேன் என கேவலமாக அசீம் பேசிய நிலையில், ஏய் உனக்கு அவ்ளோ தான் மரியாதை என விக்ரமன் பொறுத்தது போதும் மனோகரா பொங்கி எழு என்பது போல சூடாகி விட்டார். உடனடியாக அசீம் அவருக்கு மேல் தாண்டவம் ஆடுவாரே, தனது விக்கை எல்லாம் கழட்டி யாரை பார்த்து ஏய்ன்னு சொன்ன என சண்டை பிடித்து விட்டார்.

அசிங்கமான சண்டை

அசிங்கமான சண்டை

யாருடா நீ.. யாரை பார்த்து ஏய்..கிய்ன்னு பேசுற என தனது படைத் தளபதி உடையை எல்லாம் கழட்டி விட்டு சண்டைக்கே தயாராகி விட்டார். விக்ரமன் நீங்க அநாகரிகமாக பேசுறீங்க அது ரொம்ப தப்பு என அப்போதும் மரியாதை குறைவு இல்லாமல் பேச, ஏய்ன்னு சொன்னது பெரிய குத்தம் போல டேய் என்கிற வார்த்தையெல்லாம் விட்டு அடிக்கவே பாய்ந்து விட்டார் அசீம். இருவருக்கும் இடையே பெரிய சண்டை இன்னைக்கு வெடிக்க காத்திருக்கிறது.

டிஆர்பி எகிறும்

டிஆர்பி எகிறும்

இப்படி சின்னத்திரை பிரபலங்களையும், ஷார்ட் ஃபிலிம் நடிகர்களையும் அழைத்து வந்து சண்டை டிராமா போட்டே பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை விஜய் டிவி எகிற வைத்து வருவதாக நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். அசீமுக்கு இந்த வாரமாவது கமல் சார் ரியல் ரெட் கார்டு கொடுப்பாரா? இல்லை வழக்கம் போல போட்டியாளர்களை வைத்தே சர்க்கரை தண்ணி கொடுக்க வைப்பாரா என்றும் நக்கல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X