உன் கேபிஒய் டிராமா எல்லாம் இங்கே காட்டாத.. அமுதவாணனிடம் சண்டை பிடித்த அசீம்.. பெரிய சம்பவம்!
சென்னை: கேமராவில் நின்று அப்பா அம்மாவிடம் எல்லாம் அப்படி பேசி மன்னிப்பு கேட்ட அசீமா இந்த வாரமும் மீண்டும் சீப்பான விளையாட்டை விளையாடி வருகிறார் என ரசிகர்கள் பலரும் திட்டும் அளவுக்கு அசீமின் ஆட்டம் படு மோசமாக சென்றுக் கொண்டிருக்கிறது.
தனலட்சுமியிடம் அசீம் நடந்து கொண்டது தவறு மன்னிப்பு கேள் என விக்ரமன் பேச அப்படியே சிரித்து அசிங்கப்படுத்துவது போல செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் அசீம்.
அடுத்தததாக அமுதவாணனிடம் உன் கேபிஒய் டிராமாவ எல்லாம் இங்கே காட்டாதா என வரம்பு மீறி பேசி உள்ளார்.

இரிடேட் செய்யும் அசீம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசல் கோலாருக்கு பிறகு ரொம்பவே இரிடேட் செய்யும் ஒரு போட்டியாளர் யார் என்றால் அது அசீம் தான் என ரசிகர்கள் தொடர்ந்து அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர். அசீம் விளையாடுவது முறையான கேம் இல்லை என விக்ரமன், ஷிவின், ரச்சிதா, அமுதவாணன் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் சொல்லி வரும் நிலையில், ரசிகர்களும் அந்த கருத்தை ஆமோதித்து வருகின்றனர்.

அரசியல் பலம்
அரசியல் பலம் அசீமுக்கு இருப்பதால் தான் கடந்த வாரம் கூட கமல் பெரிதாக கண்டிக்காமல் விட்டு விட்டார் என்றும் அதன் விளைவு தான் இந்த வாரம் அசீம் ஆண், பெண் என அனைத்து போட்டியாளர்களையும் வாடா, போடி என பேசுவதும் முர்க்கத்தனமாக நடந்து கொள்வதுமாக இருக்கிறார் என நெட்டிசன்கள் விளாசி உள்ளனர்.

3வது புரமோவிலும் சண்டை
இன்றைய முதல் புரமோவில் இருந்தே பிக்பாஸ் வீடு மிகப்பெரிய சண்டை வீடாக மாறி உள்ளது. இரவு வரை வெயிட் செய்ய முடியாமல் அப்பப்ப ஹாட்ஸ்டார் போய் ரசிகர்கள் பார்த்து என்ன சண்டை நடந்தது என அத்தனை ஸ்க்ரீன் ஷாட் வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் டிவியில் தற்போது வெளியான 3வது புரமோவிலும் அசீம் சண்டை போடும் காட்சிகள் நிறைந்துள்ளன.

மன்னிப்பு கேட்க சொன்ன விக்ரமன்
தொடர்ந்து அநீதிக்கு எதிராக பிக் பாஸ் வீட்டில் விக்ரமன் குரல் கொடுத்து வருகிறார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தனலட்சுமி அசீம் பிரச்சனையிலும் ஒரு பெண் போட்டியாளரை அப்படி ஆவேசமாகவும் மோசமான வகையிலும் தள்ளி விட்டது தப்பு தான் அதற்கு அவரிடம் மன்னிப்பு கேள் என விக்ரமன் பேச, அவரை வெறுப்பேற்றும் விதத்தில் அசீம் பைத்தியம் போல சிரிக்கும் காட்சிகள் புரமோவில் இடம்பெற்றுள்ளன.

கேபிஒய் டிராமா
அமுதவானன் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். அவர் அசீமிடம் பேசும் போது உன்னோட கேபிஒய் டிராமா எல்லாம் இங்கே வேண்டாம் என சொல்வதும் நீ தான் பிக் பாஸா என அசீம் கேட்பதும் அநாவசிய பேச்சு என்றும் பதிலுக்கு உன் சீரியல் நடிப்பை எல்லாம் இங்கே போடாத என அமுதவாணன் சொன்னால் அசீம் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வார் என நெட்டிசன்கள் துவைத்து தொங்கப்போட்டு வருகின்றனர்.

தண்ணிய குடி
அசீம் ஆவேசமாக கோபத்தை கிளறும் வகையில் பேசினால், அமுதவாணன் இந்தா தன்ணிய குடிச்சிட்டு தெம்பா கத்து என செய்த செயல் எல்லாம் வேற லெவல். அமுதவாணன், விக்ரமன் எல்லாம் சரியான டிராக்கில் வாதிட்டு விளையாடி வருகின்றனர் என பிக் பாஸ் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











