»   »  அழகென்ற சொல்லுக்கு அமுதா.. இது சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படம்

அழகென்ற சொல்லுக்கு அமுதா.. இது சுசீந்திரன் உதவியாளர் இயக்கும் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தையே பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த சூழலில், ஒரு மென்மையான காதலைச் சொல்ல வருகிறார் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் நாகராஜன்.

படத்துக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பே அதைப் பறை சாற்றுகிறது. அழகென்ற சொல்லுக்கு அமுதா!

ஒரு இளைஞனுடைய காதலில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது.

Azhagendra Sollukku Amudha

ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா நாயகியாகவும் நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா சுரேஷ், சுவாமிநாதன், சதுரங்க வேட்டை வளவன், மகாந்தி சங்கர், கலை, நிப்பு இயக்குனர் சரவணசக்தி, மற்றும் பலர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், எழுதி நாகராஜன் இயக்குகிறார். ரஜின் மகாதேவ் இசையமைக்க, கேகே கல்யாணராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரால்ப் புரொடக்ஷன்ஸ் சார்பில், ரபேல் சுல்தானா தயாரிக்கிறார்.

சென்னை வியாசர்பாடி, பெரம்பூர், தண்டையார்பேட்டை, மற்றும் எண்ணூர் போன்ற பகுதிகளில் படபிடிப்பு நடந்து வருகிறது.

Read more about: tamil cinema
English summary
Azhagendra Sollukku Amudha is a new romantic movie directed by debutant Nagaraj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil