twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோடம்பாக்கமே ஸ்ட்ரைக்கிலிருக்கு... இந்த 'அமுதா' மட்டும் ரிலீஸ் ஆகுது!

    By Shankar
    |

    Recommended Video

    சினிமா ஸ்ட்ரைக் முடியுமா?..முடியாதா?- வீடியோ

    கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதியை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்துவிட முடியாது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு மறைந்த நாள் அது. அந்த துக்கம், ஒரு தயாரிப்பாளருக்கு பெரும் இடியாகவும் விழுந்தது.

    அழகென்ற சொல்லுக்கு அமுதா என்று ஒரு படம். டிசம்பர் 2-ம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. படம் பார்த்த ரசிகர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் நல்ல படம், பொழுதுபோக்கான நகைச்சுவை படம் என்கிற விமர்சனத்தை பெற்ற இந்தப்படம் தயாரிப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்தது.

    Azhagendra Sollukku Amudha releasing today

    ஆனால் டிச-4ஆம் தேதியே ஜெயலலிதா மறைந்துவிட்டார் என செய்தி பரவ ஆரம்பித்ததும் தியேட்டர்களில் படங்களை திரையிடுவதையும் நிறுத்திவிட்டனர். தொடர்ந்து டிச-5ஆம் தேதி ஜெயலலிதா காலமான செய்தி உறுதிப்படுத்தப்பட்டதும் அந் தவாரம் முழுதுமே தியேட்டர்கள் பக்கம் செல்வதற்கு பொதுமக்கள் யாரும் ஆர்வம் காட்டவில்லை.

    அதற்கடுத்த வாரங்களில் வெவ்வேறு படங்கள் ரிலீஸாக ஆரம்பித்த நிலையில், நல்லபடம் என பெயரெடுத்து இருந்தாலும் வெறும் மூன்று நாட்கள் ஓட்டத்துடன் 'அழகென்ற சொல்லுக்கு அமுதா' படம் தியேட்டர்களை விட்டு வெளியேற வேண்டிய இக்கட்டான சூழ்நிலை.

    Azhagendra Sollukku Amudha releasing today

    இந்த நிலையில் வரும் மார்ச்-3௦ஆம் தேதி (இன்று) இந்தப்படம் மீண்டும் தியேட்டர்களில் ரிலீஸாகிறது.

    திரையுலகில் புதிய படங்களை திரையிடக்கூடாது என வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றுவரும் நிலையில், ரிலீஸ் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்த இந்தப்படத்தின் நாயகன் ரிஜனை சந்தித்தோம்.

    "மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்த துயர நிகழ்வுடன் எங்களுக்கு இன்னொரு பேரிடியாக அமைந்துவிட்டது இந்தப்படத்தின் ரிலீஸ். அழகான, அருமையான, நல்ல படத்தை தயாரித்துள்ளோம் என தயாரிப்பாளர் சந்தோஷத்துடன் இந்தப்படத்தை ரிலீஸ் செய்தார்.

    எங்களது திரையுலக பயணத்தில் நல்லதொரு திருப்புமுனையாக இருக்கும் என நான், இயக்குநர் நாகராஜன் உள்ளிட்ட அனைவரும் நம்பிக்கையாக இருந்தோம்.. தியேட்டர்களில் இருந்தும் பத்திரிகையாளர்களிடம் இருந்து படம் நன்றாக இருக்கிறது. விஜய் சேதுபதி நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பாணியில் கலகலவென படம் நகர்கிறது என பாசிடிவான விமர்சனங்கள் வந்தன.

    படம் நன்றாக இருந்தாலும், அம்மா மரணம், செல்லாத நோட்டு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்திருந்தது ஒரு பக்கம், ஜல்லிக்கட்டு போராட்டம், பெரிய படங்கள் ரிலீஸ் என அடுத்து வந்த நாட்களில் படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முயற்சித்தும் அதற்கான வாய்ப்பு எங்களுக்கு சரியாக அமையவில்லை. ஆனாலும் இந்தப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்வதற்காக தோதான தேதியை பார்த்துவந்தோம்.

    Azhagendra Sollukku Amudha releasing today

    இந்தநிலையில், தற்போது புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என தயாரிப்பாளர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. எங்களுடைய படமும் புதிய படம் இல்லை. கால சூழலால் அதற்கான நேர்மையான வசூலைக்கூட சம்பாதிக்க முடியாமல், இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட படம்.

    அந்தப் படத்திற்கு ஒரு விடிவுகாலம் கிடைக்கிறதே, அதனால் ஏற்கனவே நொ(டி)ந்துபோய் இருக்கும் தயாரிப்பாளருக்கு அவர் இழந்ததை எப்படியாவது மீட்டுக்கொடுத்து விடலாமே என்கிற எண்ணத்தில் தான் இந்தசமயத்தில் ரிலீஸ் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளோம். வரும் மார்ச்-3௦ ஆம் தேதி இந்தப்படம் சுமார் 125 திரையரங்குகளில் ரிலீசாகிறது," என்றார்.

    Azhagendra Sollukku Amudha releasing today

    ரிஜன் சுரேஷ், ஆர்ஷிதா, பட்டிமன்றம் ராஜா, போராளி திலீபன், வளவன், தாட்சாயணி மற்றும் பலர் நடித்துள்ள இந்தப்படத்தை நாகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு கிடைக்கும் வெற்றி தங்களது திரையுலக பயணத்தில் ஒரு புதிய பாதையை அமைத்துக்கொடுக்கும் என திடமாக நம்புகின்றனர் படக்குழுவினர்.

    English summary
    Amidst the film industry strike, Azhagendra Sollukku Amudha movie is releasing again all over the state.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X