சென்னை: கோபாலபுரம் வீட்டில் நடந்த கருணாநிதியின் கொள்ளு பேரன் திருமணம் தான் கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்.
நடிகர் சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கருணாநிதியின் மகன் மு.க. முத்து-சிவகாமசுந்தரியின் மகள் வழிப் பேரன் மனு ரஞ்சித்துக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.
அவர்களின் திருமணம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது.
தயாநிதி
திருமண விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, அவரின் மகனும் சினிமா தயாரிப்பாளருமான தயாநிதி ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
மிஸ்ஸிங்
மனு ரஞ்சித் திருமணத்தில் சின்ன தாத்தாவான திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. அது ஒன்று தான் குறையாக இருந்தது.
கனிமொழி
ராஜாத்தியம்மாள் தனது மகள் கனிமொழியுடன் வந்து மணமக்களை வாழ்த்தினார். கருணாநிதியின் பேரனான அருள்நிதியும் திருமண விழாவிற்கு வந்திருந்தார்.
விக்ரம்
விக்ரம் மகளின் திருமண நிகழ்ச்சியில் தளபதி விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் கலந்து கொண்டார். மணமக்கள் கருணாநிதியிடம் ஆசி பெற்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.