»   »  மனோரமா தொடங்கி வைத்த 'அழகிய தமிழ் மகள்'... உலக தமிழ்ப் பெண்கள் அழகிப் போட்டி!

மனோரமா தொடங்கி வைத்த 'அழகிய தமிழ் மகள்'... உலக தமிழ்ப் பெண்கள் அழகிப் போட்டி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அழகிய தமிழ் மகள்... இது உலக அளவில் தமிழ்ப் பெண்களுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி. மறைந்த ஆச்சி மனோரமாதான் இந்தப் போட்டியின் லோகோவை அறிமுகப்படுத்தி, அழகிப் போட்டியைத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி இந்த அழகிய தமிழ் மகள்.

Azhagiya Tamil Magal Contest​

இந்த போட்டியின் மூலம் உலகம் முழுவதும் தமிழ் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம் என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

'அழகிய தமிழ் மகள்' மகுடம் போக, 15 பட்டங்களும் இந்த போட்டியில் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வை 'வாவ் செலிப்ரேசன்' இதழ், நிறுவனத்துடன் இணைந்து வழங்குகிறது.

Azhagiya Tamil Magal Contest​

இந்தப் போட்டியில் போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன.

18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit என்னும் வலை தளத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

Azhagiya Tamil Magal Contest​

கருண் ராமன் (ஃபேஷன் வடிவமைப்பாளர்) போன்ற தமிழகத்தின் முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் அழகியல் நிபுணர்கள் இந்தப் போட்டிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

English summary
Azhagiya Tamil Magal is the first global level Tamil beauty contest. It aims to bring out Tamil Culture, Feminism and Beauty on one single stage.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil