மாரடைப்பு.. பிரபல தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான பி.ஏ. ராஜு காலமானார்.. சோகத்தில் டோலிவுட்

ஹைதராபாத்: திடீர் மாரடைப்பு காரணமாக தெலுங்கு தயாரிப்பாளரும் பிரபல மக்கள் தொடர்பு கலைஞருமான பி.ஏ. ராஜு காலமானார்.

நடிகர் மகேஷ் பாபுவின் பி.ஆர்.ஓ.வான இவரது மறைவு செய்தி அறிந்ததும் உருக்கமான ட்வீட்டை மகேஷ் பாபு போட்டுள்ளார்.

சுமார் 1000 படங்களுக்கு மேல் இவர் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி உள்ளார். இவரது மறைவால் ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

அடுத்த சோகம்

அடுத்த சோகம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி PRO பி.ஏ. ராஜு மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை ஹைதராபாத்தில் காலமானார். இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் பி.ஏ. ராஜு. இவரது மனைவியும் இயக்குநருமான ஜெயா இரண்டு ஆண்டுகளுக்கு முன் காலமானது குறிப்பிடத்தக்கது.

மகேஷ் பாபுவின் PRO

மகேஷ் பாபுவின் PRO

டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் PROவாக பல காலமாக பணியாற்றியவர் பி.ஏ. ராஜு. அவரது மறைவு செய்தியை அறிந்த மகேஷ் பாபு, நான் குழந்தையாக இருப்பதில் இருந்தே ராஜு காருவை பார்த்து வருகிறேன். நல்ல மனிதர் அவரது இந்த மறைவை என்னால் ஏற்கவே முடியவில்லை என மனமுடைந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பல நடிகர்களுக்கு

பல நடிகர்களுக்கு

தெலுங்கு திரையுலகில் சுமார் 1000 படங்களுக்கு மேல் மக்கள் தொடர்பு பணியாற்றி உள்ள பி.ஏ. ராஜு என்.டி.ஆர், பிரபாஸ், நாகார்ஜுனா உள்ளிட்ட ஏகப்பட்ட நடிகர்களுக்கு PROவாக பணியாற்றி உள்ளார். இவரது மறைவு செய்தியை அறிந்த தெலுங்கு திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

சண்டிகாடு, பிரேமிகுலு, குண்டம்மா காரி மாவாடு, லவ்லி, சவால், வைசாகம் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்தும் உள்ளார். மாரடைப்பு காரணமாக பி.ஏ. ராஜு மரணமுற்ற நிலையில், அவரது உடலுக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X