விடுப்பில் இருக்கிறாரா கடவுள்... மலேசிய விமான தாக்குதலுக்கு பாலிவுட் பிரபலங்கள் கண்டனம்!

மும்பை: 295 பயணிகளுடன் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு பாலிவுட் நடிகர் - நடிகைகள் தங்களது கண்டனங்களையும், பலியானவர்களுக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழனன்று மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம், 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகளுடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு பறந்து சென்று கொண்டிருந்தபோது ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் பரிதாபமாகப் பலியானார்கள். இத்தகைய கொடிய செயலுக்கு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பாலிவுட் நடிகர்கள் - நடிகைகள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இத்தாக்குதல் மனிதாபிமானமற்ற செயல் என அவர்கள் விமர்சித்துள்ளனர்.

நீதி வேண்டி அழுகிறேன்....

நீதி வேண்டி அழுகிறேன்....

நடிகை பிரியங்கா சோப்ரா: மலேசியா விமான விபத்து சம்பவம் பேரதிர்ச்சியை அளிக்கிறது. இந்த உலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது? நீதி வேண்டி அழுகிறேன். விமான விபத்தில் பலியானவர்களுக்காகவும், அவர்களது குடும்பத்தினருக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

வலிமை கொடு...

வலிமை கொடு...

ஹாரூக்கான்: இந்த விபத்தில் தங்களது சொந்தங்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு இறைவனே வலிமை கொடு.

துன்பகரமான செய்தி...

துன்பகரமான செய்தி...

நடிகர் அபிசேக் பச்சன்: மலேசிய விமான தாக்குதல் மிகவும் துன்பகரமான செய்தி. அதில், பலியானவர்களின் குடும்பத்தினரை எண்ணி இறைவனை வேண்டுகிறேன்.

மனிதாபிமானமற்ற செயல்...

மனிதாபிமானமற்ற செயல்...

நடிகர் ஷாகீத் கபூர்: விமான தாக்குதல் சம்பவம் சோகத்தையும், பேரதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. பலியான அனைவருக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். போர் என்பது மனிதாபிமானமற்ற செயல். எதற்குமே வன்முறை என்பது ஒரு தீர்வு ஆகாது.

பாதுகாப்பற்ற பயணம்...

பாதுகாப்பற்ற பயணம்...

நடிகை அலியா பட்: விமான பயணம் என்பது பாதுகாப்பு நிறைந்ததா? என்பதை எண்ணி வியக்கிறேன். ஏனெனில், அப்பாவி மக்களின் உயிர் இலகுவாக எடுக்கப்பட்டு விட்டது. அவர்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

அதிர்ச்சி....

அதிர்ச்சி....

இயக்குனர் கரண் ஜோஹர்: மலேசியா விமானம் விபத்தில் சிக்கிய செய்தியை அறிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். உடனடியாக பலியானவர்களின் குடும்பத்தினர் தான் எனது நினைவுக்கு வந்தார்கள்.

பேரதிர்ச்சி...

பேரதிர்ச்சி...

நடிகை பிபாஷா பாசு: மனிதாபிமானமற்ற இந்த செயல் எனக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் இறைவன் தான் வலிமையை தர வேண்டும்.

விடுப்பில் இருக்கிறாரா கடவுள்...

விடுப்பில் இருக்கிறாரா கடவுள்...

நடிகர் அனுபம் கேர்: இறைவன் தனது நீண்ட நாள் விடுப்பில் இருந்து பூமிக்கு வர வேண்டும். அப்பாவி மக்கள் அவரை தேடுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X