ஒரே நாளில் 15 கோடி .. சும்மா தெறிக்கவிட்ட பாகி 3 கலெக்ஷன் !
மும்பை: பாகி 3 திரைப்படம் , நேற்று ஒரே நாளில் மட்டும் 15 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.
டைகர் ஷராப், ஷ்ரத்தா கப்பூர், ரித்தேஷ் தேஷ்முக், விஜய் வர்மா மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் பாகி 3 இப்படத்தை அஹமத் கான் இயக்கியுள்ளார். இப்படம் 6ம் தேதி திரைக்கு வந்தது உலகம் முழுவதும் முந்தைய பாகத்தை விட சுமார் 5500 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியானது என்று கூறப்படுகிறது.

சிறுவயது முதல் இருந்த விதம், பழகிய விதம், அண்ணனுக்கு எந்த பிரச்சனை என்றாலும் காப்பாற்றும் தம்பியாக வருகிறார் ரோன்னி (டைகர் ஷராப்). படத்தில் முக்கியமாக ஒரு கட்டத்தில் ஹீரோக்கு ஒரு வேலை வருகிறது. அச்சமயத்தில் ஒரு கும்பல் அண்ணணை கடத்துகிறது. இதனை தெரிந்து கொள்கிறார் ஹீரோ. அண்ணனுக்காக யாரை வேண்டுமானாலும் எதனை வேண்டுமானலும் அழிக்க கூடியவர் ஹீரோ டைகர் ஷராப்.

தோட்டாக்கள் தெரிக்க பீரங்கிகள் சுட வானில் ஹெலிகாப்டர் பரந்து வர ஒரு பக்கா ஆக்ஷன் திரைப்படமாக இருந்தது பாகி 3 என்பதே ரசிகர்கள் கருத்து . தனது கட்டுமஸ்தான உடலை காட்டி ஏதிரிகளை துவம்சம் செய்கிறார் டைகர் ஷராப் படத்தில் சண்டை காட்சிகள் தான் உச்சம், ஒவர் ஆல் வெறிதனம். பிஜிஎம் ஒளிப்பதிவு அனைத்தும் நன்றாகவே உள்ளது. படத்திற்காக பல உழைப்பை போட்டுள்ளார் நடிகர் டைகர் ஷராப்.

இவர் சண்டை போடும் காட்சிகள் அனைத்தும் திரையரங்குகளில் கைதட்டல் வாங்குகிறது, ஆனால் , ஷ்ரத்தா கப்பூரின் அதிகப்படியான கவர்ச்சி ரசிகர்களை சில காட்சிகளில் முகம் சுழிக்க வைத்துள்ளது.

ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, பாகி3 திரைப்படம் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 15 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 77 கோடி கலெக்ஷசனை அள்ளியுள்ளது.



Click it and Unblock the Notifications











