அப்போ கியாரா அத்வானி போட்டோ.. இப்போ திஷா படானி டான்ஸ்.. பாலிவுட்டில் பெருகும் காப்பிகேட்!
மும்பை: கியாரா அத்வானியின் நிர்வாண போட்டோஷூட் காப்பி கேட் சர்ச்சையில் சிக்கியது.
அதனைத் தொடர்ந்து, பாகி 3 படத்தில் திஷா படானி ஆடும் நடன அசைவுகளும் காப்பி கேட் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
அகமது கான் இயக்கத்தில், டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், ரித்தேஷ் தேஷ்முக் நடிப்பில் உருவாகி உள்ள பாகி 3ம் பாகம் விரைவில் திரைக்கு வருகிறது.
படமே ரீமேக்
பாகி முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர் காம்பினேஷனில், இன்னும் பிரம்மாண்டமாக 3ம் பாகம் உருவாகி உள்ளது. தமிழில் லிங்குசாமி இயக்கத்தில், ஆர்யா, மாதவன், அமலா பால், சமீரா ரெட்டி நடிப்பில் வெளியான வேட்டை படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் பாகி 3.
ஒரு பாட்டுக்கு
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாட்டுக்கு, பாலிவுட் நடிகை திஷா படானி செம செக்ஸியாக நடனமாடியுள்ளார். Do You Love Me என்ற அந்த பாடலின் டீசர் மற்றும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், பாடலில் வரும் நடன அசைவு காப்பி கேட் பிரச்சனையில் சிக்கி உள்ளது.
வித்தியாசமான பிரச்சனை
பாலிவுட்டில் சமீப காலமாக காப்பி கேட் பிரச்சனைகள் தலை விரித்து ஆடுகின்றன. ஆனால், இந்த பாட்டுக்கு, வந்திருக்கும் காப்பி கேட் பிரச்சனை ரொம்ப வித்தியாசமானது. இங்கிலாந்து இசைக் கலைஞர் ட்ராய் பாயின் Do You? பாடலின் நடன அசைவை பாகி 3 படக்குழு காப்பி அடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெரிய செக்
பாகி 3 பாடல் பாடல் குறித்த தகவலை அறிந்த இங்கிலாந்து இசை கலைஞர் ட்ராய் பாய், இந்தியாவில், தனது பாடலை காப்பி அடித்துள்ளனர் என்றும், மிகப் பெரிய செக் தனக்கு கிடைக்கும் என்ற கனவுடன் தூங்க போகிறேன் என கிண்டலாக கமெண்ட் செய்துள்ளார். இதற்காக அவர் நிச்சயம் வழக்கு தொடர்வார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கியாரா அத்வானிக்கும்
சமீபத்தில், தபு ரத்னானி கேலண்டர் ஷூட்டுக்காக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நிர்வாணமாக கொடுத்த போட்டோஷூட் போஸும், பிரபல வெளிநாட்டு புகைப்படக் கலைஞர் ஒருவரின் கருத்தாக்கம் என்ற காப்பி கேட் பிரச்சனையும், பாலிவுட்டில் மிகப் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

எப்போ ரிலீஸ்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தயாரிப்பில், பிரம்மாண்ட பொருட் செலவில் அகமத் கான் இயக்கத்தில் உருவாகி வரும் பாகி 3 திரைப்படம், வரும் மார்ச் 6ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர், ரித்திஷ் தேஷ்முக், அன்கிதா லோகண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











