கூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்

By Siva

ஹைதராபாத்: பாகுபலி 2 படம் ரிலீஸாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் பிரபாஸ் ஃபீல் பண்ணி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி 2 உலக அளவில் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

அந்த படம் ரிலீஸாகி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

ஃபேஸ்புக்

படம் ரிலீஸாகி ஓராண்டு நிறைவடைந்த நேரத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் பிரபாஸ். மேலும் ராஜமவுலி மற்றும் மொத்த படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமரேந்திர பாகுபலி

அமரேந்திர பாகுபலி

மகேந்திர பாகுபலியை விட அவரின் தந்தையான அமரேந்திர பாகுபலி தான் பலரின் மனதையும் கொள்ளையடித்தார் என்று கூற வேண்டும். அமரேந்திர பாகுபலி ஸ்கிரீனில் வந்தாலே ஒரு இனம் தெரியாத மரியாதையும், பாசமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. அவர் தேவசேனா முன்பு முட்டாள் போன்று நடித்த காட்சிகளை யாராலும் மறக்கவே முடியாது. ரசிகர்கள் ரசித்து ரசித்து பார்த்த காட்சிகள் அவை.

ராஜமாதா

ராஜமாதா

குந்தலதேச இளவரசியாகவும் சரி, மகிழ்மதி மருமகளாகவும் சரி தேவசேனா தனது நடிப்பால் அசத்தினார். ராஜமாதாவின் நடிப்பை சொல்லவே வேண்டாம். கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருந்தார் ராஜமாதா.

பல்லா

பல்லா

அடப்பாவி கட்டப்பா இப்படி பாகுபலியை கொன்றுவிட்டாயே என்று ரசிகர்கள் அதிகம் ஃபீல் செய்தார்கள். பல்வாள் தேவன் வில்லத்தனத்தில் அசத்தி விட்டார். பல்வாள் தேவன் ஸ்கிரீனில் வந்தாலே ராணா வில்லனாக நடித்துள்ளார் என்பதை மக்கள் மறந்து அவரை சபித்தனர். பல்வாள் தேவனின் தந்தையாக நடித்த நாசர் பிஜ்ஜால தேவனாகவே வாழ்ந்துவிட்டார்.

தனி ரகம்

தனி ரகம்

பாகுபலி படத்தில் நடித்தவர்கள் அந்தந்த கதாபாத்திரங்களாகவே மாறினார்கள் என்றால், கீரவாணியின் இசை அது வேறு ரகம். ஒவ்வொரு பாடலும் ரசிக்கும்படி இருந்தது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் இருந்தது இசை என்றால் அது மிகையாகாது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் அருமையோ அருமை.

ஏன்?

ஏன்?

கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இரண்டு ஆண்டு காத்திருந்தனர். படம் துவங்கிய சில நிமிடத்திலேயே அதற்கான பதில் கிடைத்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X