#Baahubali2 ஏன், ஏன்னு நாம் 2 வருஷமாக கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்த நாள் இன்று
ஹைதராபாத்: பாகுபலி 2 படம் ரிலீஸாகி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸானது.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தனர். பாகுபலி 2 ரிலீஸாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகிறது.
ராணா
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் என் வாழ்க்கையும், இந்திய சினிமாவும் மாறிவிட்டது என்று ட்வீட் செய்துள்ளார் ராணா.

பிரபாஸ்
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களுக்காக நான் 5 ஆண்டுகளை ஒதுக்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் தெலுங்கு சினிமா மீது வைத்திருந்த எண்ணத்தை மாற்றியது பாகுபலி என்கிறார் பிரபாஸ்.
கொண்டாட்டம்
பாகுபலி 2 ரிலீஸாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹாரின் தர்மா புரொடக்ஷன்ஸ் கொண்டாடுகிறது. பாகுபலி 2 படத்தை கரண் ஜோஹார் தான் இந்தியில் ரிலீஸ் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
தெலுங்கு திரையுலகிற்கு பெருமை தேடித் தந்த ராஜமவுலிக்கு ரசிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











