ரூ.1000 கோடி வசூலித்து சரித்திரம் படைத்த பாகுபலி 2: மிரண்டு போயுள்ள உலக சினிமா
சென்னை: பாகுபலி 2 படம் ரிலீஸான 10 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்து சரித்திரம் படைத்துள்ளது.
எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த 28ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது.
இந்நிலையில் பாகுபலி 2 படம் சரித்திரம் படைத்துள்ளது.
ரூ. 1000 கோடி
பாகுபலி 2 படம் ரூ. 1000 கோடி வசூலிக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் படம் ரிலீஸான பத்தே நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்து திரையுலகில் சரித்திரம் படைத்துள்ளது.

ராஜமவுலி
ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற பெருமையை படைத்துள்ளது பாகுபலி 2. இந்த சாதனையை முறியடிக்க நிச்சயம் பல ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சினிமா
பாகுபலி படம் ரிலீஸானபோதே உலக சினிமா இந்திய சினிமாவை வியந்து திரும்பிப் பார்த்தது. தற்போது பாகுபலி 2 பாக்ஸ் ஆபீஸில் மிரட்டி வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வாழ்த்துக்கள்
சரித்திரம் படைத்துள்ள பாகுபலி 2 படக்குழுவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ராஜமவுலி உலக அளவில் இந்திய சினிமாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











