twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கான்களை அடுத்து சேட்டன் நடிகர்களை மிரள வைத்த பிரபாஸ்

    By Siva
    |

    திருவனந்தபுரம்: பாகுபலி 2 படம் கேரளாவில் மட்டும் ரூ. 50 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

    ராஜமவுலி இயக்கிய பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1000 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் என்ற சாதனையை படைத்துள்ளது. விரைவில் ரூ. 1,500 கோடி வசூலை தொட உள்ளது.

    இந்நிலையில் படம் கேரளாவிலும் சாதனை படைத்துள்ளது.

    ரூ. 50 கோடி

    ரூ. 50 கோடி

    பாகுபலி 2 படம் ரிலீஸான 14 நாட்களில் கேரளாவில் மட்டும் ரூ. 52 கோடி வசூல் செய்துள்ளது. கேரள பாக்ஸ் ஆபீஸில் வேகமாக ரூ. 50 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது பாகுபலி 2.

    புலிமுருகன்

    புலிமுருகன்

    மோகன்லாலின் புலிமுருகன் படத்தை அடுத்து கேரளாவில் ரூ. 50 கோடி வசூல் செய்த படம் பாகுபலி 2. புலிமுருகன் படம் ரூ.16 நாட்களில் ரூ. 50 கோடி வசூலித்தது. பாகுபலியோ 14 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்தது.

    கேரளா

    கேரளா

    பாகுபலி 2 படம் கேரளாவில் 300 தியேட்டர்களில் ரிலீஸானது. ரிலீஸாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் தற்போதும் 300 தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.

    சாதனை

    சாதனை

    விக்ரம் நடித்த ஐ படம் கேரளாவில் ரூ. 20 கோடி வசூலித்தது. ஐ தான் கேரளாவில் அதிகம் வசூல் செய்த மலையாளம் அல்லாத படம் ஆகும். அந்த சாதனையையும் பாகுபலி 2 முறியடித்துள்ளது.

    விடுமுறை

    விடுமுறை

    பள்ளி, கல்லூரி விடுமுறை காலம் என்பதால் கேரளாவில் இதுவரை அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை பாகுபலி 2 படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    English summary
    Reportedly, Baahubali 2: The Conclusion entered the 50-Crore club at the Kerala box office, within 14 days of its run. The film is now the fastest entrant to the 50-Crore club at the Kerala box office by beating the record set by Pulimurugan, which took above 16 days to reach the mark.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X