இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக.. 'பாகுபலி 2' இன்று படைத்த சாதனை தெரியுமா?
சென்னை: பாகுபலி 2 படம் ரிலீஸான 21 நாட்களில் உலக அளவில் ரூ.1, 500 கோடி வசூல் செய்துள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் கடந்த மாதம் 28ம் தேதி வெளியானது.
பாகுபலி 2 ரிலீஸானதில் இருந்து புதுப் புது சாதனைகள் படைத்து வருகிறது.
ரூ. 1,500 கோடி
படம் ரிலீஸான 21 நாட்களில் உலக அளவில் ரூ. 1,500 கோடி வசூல் செய்துள்ளது. உலக அளவில் ரூ. 1, 500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2 என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான்
பாகுபலி 2 படம் பாகிஸ்தானில் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இமாலய சாதனையை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு பாகுபலி 2 படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.
பாகுபலி 2
பாகுபலி 2 படத்தின் இந்தி பதிப்பு ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது! உலக அளவில் மேனியா தொடர்கிறது!!! #Baahubali1500cr
சாதனை
#1500crorebaahubali ரூ.1,000 கோடி, ரூ. 1,500 கோடி கிளப்புகளை துவங்கிய முதல் இந்திய படம்.


Click it and Unblock the Notifications











