Don't Miss!
- News காத்திருக்கும் ஆபத்து..ரோட்டுக்கே வந்த ஆர்பி உதயகுமார்! அரெஸ்ட் பண்ணிட்டாங்களாமே! என்ன பிரச்சினை?
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏம்ப்பா.. இதுலேயும் 'பாகுபலி 2' தான் ஃபர்ஸ்டா?
Recommended Video
சென்னை : பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த 'பாகுபலி 2' படம் இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்து தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
வசூலில் பல புதிய சாதனைகளை முதன்முதலில் படைத்த 'பாகுபலி 2' படம் பைரசி டவுண்லோடிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையதளங்களில் டவுண்லோட் செய்துள்ளனராம்.
பைரசி தளங்களில் சினிமா படங்கள் பற்றி ஆய்வு செய்த ஜெர்மனி நிறுவனம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. 'பாகுபலி 2' படத்தை 93 லட்சம் பேர் வரை இணையதளங்களில் டவுண்லோட் செய்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
இரண்டாமிடத்தில் இந்தி படமான 'ரயீஸ்' 62 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்துள்ளது. 'பாகுபலி 2' படம் 93 லட்சம் டவுண்லோடுகள் என்றாலும், அதை மற்றவர்களுக்குக் 'காப்பி' செய்து கொடுத்த பார்த்தவர்களின் விவரம் இதில் வராது. அப்படியானால், உண்மையாக பைரசியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும்.
சினிமா துறையினருக்கு பெரும் குடைச்சலாக இருக்கும் பைரசி சினிமா தளங்கள் இதனால் பெருமளவு பணம் ஈட்டுகின்றன. சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைகின்றன. இதற்கெல்லாம் தீர்வு ஏற்படுமா என்பது தான் சினிமா ஆர்வலர்களின் கேள்வி.