சீனா போகும் பாகுபலி 2: ஆனால் தங்கல் வசூலை...
ஹைதராபாத்: பாகுபலி 2 படம் செப்டம்பர் மாதம் சீனாவில் ரிலீஸாக உள்ளது.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
படம் இந்தியாவில் இன்னும் 1,050 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

வசூல்
பாகுபலி 2 படம் உலக அளவில் இதுவரை ரூ. 1, 684 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் பாகுபலி 2 படத்தை செப்டம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

சீனா
சீனாவில் 4 ஆயிரம் தியேட்டர்களில் பாகுபலி 2 படம் ரிலீஸாக உள்ளது. இந்த ரிலீஸையொட்டி பிரபாஸ், அனுஷ்கா, ராஜமவுலி உள்ளிட்டோர் படத்தை விளம்பரப்படுத்த சீனா செல்கிறார்கள்.

பாகுபலி
பாகுபலி படம் சீனாவில் 6 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸானது. ஆனால் சீன ரசிகர்களுக்கு பாகுபலி படம் அவ்வளவாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் பாகுபலி 2 படம் ரிலீஸாகும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

தங்கல்
ஆமீர் கானின் தங்கல் படம் சீனாவில் 90 ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. படம் சீனாவில் மட்டும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. ஆனால் பாகுபலி 2 தங்கல் அளவுக்கு ஓடுமா என்ற சந்தேகத்தை பலர் எழுப்புகிறார்கள்.


Click it and Unblock the Notifications











