கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?: ஏப்ரல் 28ம் தேதி தெரியும்
சென்னை: பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் அறிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பாகுபலி பாக்ஸ் ஆபீஸை பிரித்து மேய்ந்தது.

பாலிவுட், ஹாலிவுட்காரர்களை எல்லாம் திரும்பிப் பார்க்க வைத்த படம் பாகுபலி. இந்நிலையில் தான் ராஜமவுலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட பிரமாண்டமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் பாகுபலி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
.@BaahubaliMovie The Conclusion பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார்.
கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்பதை தெரிந்து கொள்ள ஏப்ரல் மாதம் வரை காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











