7 ஆண்டுகளாக பெண்ணை சீரழித்து கர்ப்பமாக்கிய பாகுபலி நடிகர்
ஹைதராபாத்: 7 ஆண்டுகளாக ஒரு பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாகுபலி பட நடிகர் வெங்கட பிரசாத்தை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸின் வளர்ப்புத் தந்தையாக நடித்தவர் வெங்கட பிரசாத். அவர் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத்ஸ் ஐமேக்ஸ் மல்டிபிளக்ஸில் மேனேஜராகவும் உள்ளார்.
அந்த மல்டிபிளக்ஸில் வேலை செய்யும் பெண் ஒருவர் பிரசாத் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொல்லை
பிரசாத் 7 ஆண்டுகளாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் என்னுடன் நெருங்கிப் பழகியதில் 2 முறை கர்ப்பம் ஆனேன். ஆனால் அவர் வலுக்கட்டாயமாக கருவை கலைக்க வைத்துவிட்டார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

கர்ப்பம்
என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டேன். அவரோ திருமணப் பேச்சை எடுத்தால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்கிறார் அந்த பெண்.

மேலும் ஒரு பெண்
வெங்கட பிரசாத் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாதை கைது செய்துள்ளனர்.

நம்பிக்கை துரோகம்
திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் அந்த பெண். அவருக்கு விவாகரத்து கிடைக்கும் முன்பே பிரசாத் அவருக்கு மறுமணம் ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார்.

பெண்கள்
வெங்கட பிரசாத் பல பெண்களுடன் நெருங்கிப் பழகி ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











