சுளையாய் வந்த 150 கோடி ரூபாய்.. முடியவே முடியாது என நோ சொன்ன 'பாகுபலி'.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: விளம்பர படங்களில் நடிக்க வந்த 150 கோடி ரூபாய் டீலை வேண்டாம் என நடிகர் பிரபாஸ் திருப்பி அனுப்பிய தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் அவரது நடிப்பில் வெளியான பாகுபாலி 1 மற்றும் பாகுபலி 2 படங்கள் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

வசூலை குவித்த படம்
தமிழ், தெலுங்கு மொழியில் வெளியான இப்படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. இப்படத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார் நடிகர் பிரபாஸ். இந்திய சினிமாவில் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை பெற்றது பாகுபலி சீரிஸ் படங்கள்.

சாஹோ படம்
இதனால் பிரபாஸின் மார்க்கெட்டும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. பாகுபலி படங்களுக்கு பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.

உதறித்தள்ளிய பிரபாஸ்
தற்போது ராதே ஷியாம், சலார், ஆதிபுருஷ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். இந்த படங்கள் அனைத்துமே பெரிய பட்ஜெட் படங்கள் தான். இந்நிலையில் நடிகர் பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளத்தில் வந்த டீலை நோ சொல்லி உதறித்தள்ளிய தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.150 கோடி சம்பளம்
அதாவது கடந்த ஓராண்டில் மட்டும் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். இந்த விளம்பரங்களில் நடித்திருந்தால் அவருக்கு 150 கோடி ரூபாய் வரை சம்பளம் கிடைத்திருக்கும் என தெரிகிறது.
Recommended Video

அதிக ரசிகர்களால்
ஆனால் நடிகர் பிரபாஸ் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். தனக்கு நாடு முழுவதும் அதிகளவு ரசிகர்கள் உள்ளதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் மட்டும் நடிக்க வேண்டும் என உறுதியாக உள்ளாராம் பிரபாஸ். இதனால் 150 கோடி ரூபாய் வருமானத்தை உதறி தள்ளியுள்ளார் பிரபாஸ்.


Click it and Unblock the Notifications











