நடிகையுடன் கள்ளத்தொடர்பு என சந்தேகம்: பாகுபலி பட நடிகரின் மனைவி தற்கொலை
ஹைதராபாத்: நடிகர் மது பிரகாஷின் மனைவி பாரதி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் மது பிராகஷ். தொலைக்காட்சி நடிகரான அவருக்கும், பாரதி என்கிற பெண்ணுக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

மதுவும், பாரதியும் ஹைதராபாத்தில் வசித்து வந்தனர். மது தன்னுடன் நேரம் செலவிடுவது இல்லை என்பது பாரதிக்கு பெரும் வருத்தமாக இருந்தது. இது தொடர்பாக கணவனுக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
காலையில் வீட்டை விட்டு கிளம்பினால் இரவு தாமதமாகத் தான் வருவாராம் மது. மது பிரகாஷுக்கும் அவருடன் நடிக்கும் நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதிக்கு சந்தேகம் இருந்துள்ளது. கணவர் மீது பாரதி முன்பு போலீசில் கூட புகார் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு பாரதி மதுவுக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார். மேலும் சீக்கிரம் வீட்டிற்கு வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பாரதி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து மது பிரகாஷ் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாரதி மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாகத் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாரதியின் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மது பிரகாஷிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளனர். நடிகரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications











