»   »  ரூ 500 கோடி வசூலை நெருங்கும் பாகுபலி.. தென்னிந்திய சினிமாவில் புதிய வரலாறு!

ரூ 500 கோடி வசூலை நெருங்கும் பாகுபலி.. தென்னிந்திய சினிமாவில் புதிய வரலாறு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எஸ்எஸ் ராஜமவுலி ரூ 450 கோடிக்கு மேல் வசூலித்து தென் இந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Select City
Buy Baahubali - The Beginning (Part I) (U/A) Tickets

தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக தயாரான பாகுபலி, இந்தி, மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசான இப்படம், வெளியாகி 15 நாட்களான பிறகும் குறையாத வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது.


சாதனை

சாதனை

இந்தப் படத்தின் வசூல் இதற்கு முந்தைய தென் இந்திய மொழி படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது. விரைவில் ஆமீர்கானின் பிகே பட சாதனையை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ரூ 450 கோடி

ரூ 450 கோடி

இந்த படம் ரூ.250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இதுவரை ரூ.450 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இது விரைவில் ரூ 500 கோடியைத் தொடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் தெரிவிக்கின்றனர்.


சீனாவில்

சீனாவில்

விரைவில் இப்படம் சீன, ஜப்பானிய மொழிகளிலும் ‘டப்பிங்' செய்து வெளியிடப்படுகிறது. அப்போது படத்தின் வசூல் மேலும் உயரும்.


இரண்டாம் பாகம்

இரண்டாம் பாகம்

படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 15-ல் தொடங்குகிறது. அடுத்த ஆண்டே படம் வெளியாகிறது.


English summary
Baabhubali movie has set a new historical record by collection Rs 450 cr in 15 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil