ரஜினியின் முத்துவை நெருங்க முடியாத பாகுபலி.. இன்று வரை முறியடிக்க முடியாத சாதனை !

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு இந்திய அளவில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோன்று வெளிநாடுகளிலும் பலத்த வரவேற்பு இருந்து வருகிறது.

மலேசியா, ஜப்பான், சைனா என பல நாடுகளில் ரஜினியின் படங்களுக்கு அடிமையான ரசிகர்கள் பலகோடி கணக்கில் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் ரஜினியின் கபாலி, 2.0, போன்ற படங்கள் வெளிநாட்டில் நல்ல வசூலை வாரி குவித்த நிலையில், உலக அளவில் உயர்ந்து நிற்கும் பாகுபலி திரைப்படம் இன்றளவும் முத்து படத்தின் வசூலை நெருங்க முடியவில்லை.

வெளிநாடுகளிலும் வசூல் சாதனை

வெளிநாடுகளிலும் வசூல் சாதனை

இந்தியத் திரைப்படத் துறையில் சமீபகாலமாக உலகமே வியந்து பார்க்கும் பல பிரம்மாண்ட படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய எந்திரன், 2.0 மற்றும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி பாகம் 1 மற்றும் 2 மற்றும் ஹிந்தியில் வெளியான பத்மாவதி போன்ற படங்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை செய்துள்ளது.

அதிக வசூல்

அதிக வசூல்

இதில் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் இந்திய திரைப்படத்துறையின் பாக்ஸ் ஆபீஸை மட்டுமல்லாமல் உலக அளவில் பல நாடுகளின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனையும் அசைத்துப் பார்த்து இந்தியத் திரைப்படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.

ரஜினியின் முத்து

ரஜினியின் முத்து

உலகில் பல நாடுகளில் பாகுபலி வசூல் சாதனையை செய்திருந்தாலும் ஜப்பானில் இதுவரை இருந்து வரும் ரஜினியின் முத்து திரைப்படம் செய்த வசூல் சாதனையை இன்றளவும் முறியடிக்க முடியவில்லை.

முதலிடத்தில் இருந்தது

முதலிடத்தில் இருந்தது

1995ஆம் ஆண்டு தமிழில் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மீனா நடித்திருந்த "முத்து" திரைப்படம் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட 175 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி அந்த ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதலிடத்தில் இருந்தது.

400 மில்லியனை வசூல்

400 மில்லியனை வசூல்

இந்நிலையில் இந்தப்படம் 1998ஆம் ஆண்டு ஜப்பானில் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 400 மில்லியனை வசூல் செய்து ஜப்பானில் வெளியான இந்திய படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை "முத்து" பெற்றது. ரஜினியின் தனித்துவமான ஸ்டைல், காமெடி மற்றும் ரசிக்க வைக்கும் சண்டை காட்சிகள் என அனைத்தும் சிறப்பம்சமும் கொண்ட முத்து திரைப்படம் ஜப்பான் ரசிகர்களை மிகவும் கவர்ந்து இன்றுவரை அனைவராலும் ரசிக்கப்படும் இந்திய படங்களில் முதன்மையாக இருந்து வருகிறது.

பாகுபலியால் முறியடிக்க

பாகுபலியால் முறியடிக்க

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான பாகுபலி திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் வெளியாகி வசூல் சாதனை செய்து வந்த நிலையில் ஜப்பானிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது. எனினும் ஜப்பான் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட முத்து திரைப்படத்தின் வசூலை இன்றுவரை பாகுபலியால் முறியடிக்க முடியவில்லை.

450 மில்லியன்

450 மில்லியன்

2018 ஆம் ஆண்டு முத்து திரைப்படம் மீண்டும் டிஜிட்டலைஸ்டு 4k வேர்ஸனில் வெளியாகி 50 மில்லியன் வசூலித்து இதுவரை மொத்தம் 450 மில்லியன் வரை வசூல் செய்துள்ள நிலையில் பாகுபலி இன்றுவரை 275 மில்லியன் மட்டுமே வசூல் செய்துள்ளது.

இரண்டாவதாக பாகுபலி

இரண்டாவதாக பாகுபலி

இவ்வாறு ஜப்பானில் அசைக்க முடியாத வசூல் சாதனையை செய்துள்ள முத்து திரைப்படம் முதலிடத்தில் இருக்கும் நிலையில், இரண்டாவதாக பாகுபலியும் அதைத்தொடர்ந்து 3 இடியட்ஸ், இங்கிலீஷ் விங்கிலீஷ் மற்றும் சகோ போன்ற 5 இந்திய திரைப்படங்கள் ஜப்பானில் அதிகம் வசூல் செய்யப்பட்ட படங்களாக நிமிர்ந்து நிற்கிறது.

அசைக்க முடியவில்லை

அசைக்க முடியவில்லை

முத்து திரைப்படம் வெளியாகி இன்று வரை 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், என்னதான் புது தொழில்நுட்பம் மற்றும் பிரம்மாண்ட பொருட் செலவு என உலகமே வியக்கும் வகையில் பாகுபலி இரண்டு பாகங்களாக உருவாகி இருந்தாலும் முத்து படத்தை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என சொல்லிக்கொண்டு ரஜினி ரசிகர்கள் கெத்தாக வலம் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X