'பாஹுபாலி'யின் பிரம்மாண்டம்... 4500 ஷாட்கள் கிராபிக்ஸ்

By Mayura Akilan

ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி வரும் 'பாஹுபாலி' படத்திற்காக 4500 ஷாட்கள் கிராபிக்ஸ் காட்சிகள் செய்து சாதனை படைக்க உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடிக்கும் படம் 'பாஹுபாலி.

''நான் ஈ' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் இந்தியளவில் அனைவரையும் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜமெளலி. பாஹூபாலி படத்தை இயக்குகிறார்.

கிராபிக்ஸ் மயம்

கிராபிக்ஸ் மயம்

தெலுங்கு திரைப்பட உலகிலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகி வரும் படம் என்ற சாதனையை பெற்றுள்ள திரைப்படம் 'பாஹுபாலி'. இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மூலமாகவும் புதிய சாதனை படைக்க இருக்கிறார் ராஜமெளலி.

4500 கிராபிக்ஸ் ஷாட்கள்

4500 கிராபிக்ஸ் ஷாட்கள்

'பாஹுபாலி' படத்திற்காக 4500 ஷாட்கள் கிராபிக்ஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இது ராஜமௌலியின் முந்தைய படமான நான் ஈ படத்தை விட இருமடங்கு அதிகம் என்கின்றனர். நான் ஈ படத்தில் 2234 கிராபிக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டன.

ரா ஒன் விட அதிகம்

ரா ஒன் விட அதிகம்

இந்தியளவில் 'ரா ஒன்' மற்றும் 'க்ரிஷ் 3' உள்ளிட்ட படங்களில் கூட இந்தளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகள் கையாளப்பட்டதில்லை.

இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக மட்டும் பல கோடிகளை இறைத்திருக்கிறார்கள்.

பிரம்மாண்ட அரண்மனைகள்

பிரம்மாண்ட அரண்மனைகள்

"படம் பார்ப்பவர்களை பழங்கால கோட்டைகள், அரண்மனைகள், போர்கள் என பிரமிக்க வைக்கும். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பல்வேறு வெளிநாட்டு வல்லுனர்கள் பணியாற்றி வருகிறார்கள்." என்று கூறியுள்ளார் 'பாஹுபாலி' தயாரிப்பாளர் ஷோபு

ஜைன துறவிகள் எதிர்ப்பு

ஜைன துறவிகள் எதிர்ப்பு

பாஹூபாலி என்ற பெயர் ஒரு ஜைன துறவியை குறிக்கிறதாம். அமைதியே உருவான ஜைனர்களுக்கு வாளும், கத்தியும், ரத்தமும் அலர்ஜி. எனவே பாஹூபாலி படத்தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனராம் ஜைனதுறவிகள்.

சமாதான முயற்சி

சமாதான முயற்சி

2015ம் ஆண்டில்தான் பாஹூபாலி திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. எனவே இப்போதே விளக்கம் கொடுத்தால் கதை கசிந்துவிடுமே என்று கூறி ஜைனத்துறவிகளை சமாதானம் பேச அழைத்துள்ளார்களாம் படத் தயாரிப்புக்குழுவினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X