For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாகுபலி, பல்வாள்தேவன் கூடவே தேவசேனா லண்டன் பறக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி - ஏன் தெரியுமா?

  |
  பாகுபலி டைரக்டர் ராஜமௌலியின் அடுத்த படம் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் தான்- வீடியோ

  சென்னை: பாகுபலி இந்திய சினிமாவின் பிரம்மாண்டத்தின் உச்சம். 1200 கோடி ரூபாய் வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகுபலியின் சாதனை வெற்றியை கொண்டாட இந்த படத்தில் நடித்த பாகுபலி, பல்வாள்தேவன், தேவாசேனா உள்ளிட்ட அனைவருடனும் லண்டன் செல்கிறார் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி. வரும் 19ஆம் தேதியன்று லண்டனில், பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி நடத்தும் பில்ஹார்மோனிக் இசை நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த பாகுபலி குழுவும் லண்டன் செல்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி ராயல் ரீயுனியன் என்ற ட்விட்டை பதிவிட்டு எம்.எம்.கீரவானி, அனுஷ்கா, ராணா, பிரபாஸ் ஆகியோர் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

  இந்திய சினிமாவில் பிரமாண்டத்தின் உச்சம் என்று சொல்லப்படும் அளவில், சுமார் 450 கோடி ரூபாய் செலவில் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா ,தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர்,
  ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் மிரட்டலான நடிப்பில், இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்ட வரலாற்று காவியம். இந்திய சினிமா வரலாற்றில் இதுவரைக்கும் எந்த ஒரு சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை செய்துள்ளது.

  Baahubali Movie Crew going to celebrate the success in London

  இதுவரைக்கும் வசூலான தொகை சுமார் 1200 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக படக்குழுவே அறிவித்துள்ளது. இந்த காவிய படத்தைப் பற்றி நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயம், நம்முடைய பிரபாஸ். பாகுபலி படத்திற்கு முன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அத்தனை படங்களிலும் கிடைத்திராத பேர், பணம், புகழ் இந்த மூன்றையும் ஒரே படத்தின் மூலம் சம்பாதித்தவர்.

  பிரபாஸ். பாகுபலி படத்திற்கு முன் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அத்தனை படங்களில் கிடைத்திராத பேர், பணம், புகழ் இந்த மூன்றையும் ஒரே படத்தின் மூலம் சம்பாதித்தவர்.

  உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் சாஹோ படத்தின் மூலம் மீண்டும் சினிமா ரசிகர்களின் பார்வையை தன் மீது திருப்பியிருக்கிறார். இதனால் தான் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இவரை நவாப் ஒப் நிசாம் என்று அழைக்கிறார்கள். இந்த தருணத்தில் இவருக்கு போட்டியாக இன்னொருவரும் வந்திருக்கிறார். அவர் தான் தாரக் என்றழைக்கப்படும் ஜூனியர் என்.டி.ஆர். இவர் அரவிந்தா சமேத என்ற திரைப்படத்தின் மூலம் ஆந்திரா

  கண்டிப்பா பார்க்கணும்.. இது 4வது ஹிட்.. சொல்லிவைத்து சம்பவம் செய்த வெற்றி - தனுஷ் கூட்டணி!கண்டிப்பா பார்க்கணும்.. இது 4வது ஹிட்.. சொல்லிவைத்து சம்பவம் செய்த வெற்றி - தனுஷ் கூட்டணி!

  மற்றும் தெலுங்கானா ரசிகர்களை ஒரு கலக்கு கலக்கி தன்னுடைய தாத்தாவின் (என்.டி.ஆர்) பேரை காப்பாற்றியதோடு, அவர்களின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

  தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி பாகுபலி வெற்றிப்படத்திற்கு பின்பு ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர் ஆர் ஆர் இயக்கிவருகிறார். இந்த படமும் முடிவுரும் தருவாயில் உள்ளது.

  இன்றைய ட்ரெண்டிங் செய்தி என்ன தெரியுமா. கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான சயீரா நரசிம்ம ரெட்டி திரைப்படம், மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்தது. இந்த திரைப்படத்தையும் பாகுபலி

  மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த படங்களையும் தராசில் வைத்து பார்த்தால், அந்த அளவுக்கு சயீரா வெற்றிக் கோட்டை தொடவில்லையாம்.

  கூடவே மற்றொரு செய்தியும் உலா வருகிறது. அதாவது சயீரா படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷனும் எதிர்பார்த்த அளவில் இல்லாமல் தொய்வடைந்துவிட்டதாக செய்தி ஒன்று தெலுங்கு சினிமா உலகில் காற்றில் மிதந்து வருகிறது.

  இந்த நிலையில் பாகுபலி வெற்றியை கொண்டாட இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் லண்டன் செல்கின்றனர். வரும் அக்டோபர் 19ஆம் தேதியன்று லண்டனில், பாகுபலி இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி நடத்தும் பில்ஹார்மோனிக் இசை நிகழ்ச்சிக்காக ஒட்டுமொத்த பாகுபலி குழுவும் லண்டன் செல்கிறது.

  இதை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் பிரபாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தி ராயல் ரீயுனியன் என்ற ட்விட்டை பதிவிட்டு எம்.எம்.கீரவானி, அனுஷ்கா, ராணா, பிரபாஸ் ஆகியோர் இருக்கும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

  லண்டன் இசை நிகழ்ச்சியை கண்டு ரசிக்க ஆந்திரா மற்றும் தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

  English summary
  The all-star cast of the film goes to London to celebrate the success of 'Baahubali'. On October 19th in London, the entire Baahubali group is
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X