twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘’ஜெய் மகிழ்மதி’’..பாகுபலி வெளியாகி ஏழு ஆண்டு நிறைவு !

    |

    சென்னை : "பாகுபலி" உலகம் முழுவதையும் திரும்பி பார்க்கவைத்த ஓர் திரைப்படம். அசத்தலான திரைக்கதை, பிரம்மாண்ட காட்சிஅமைப்பு என ஒவ்வொரு காட்சிக்கும் விழிகள் விரிந்து, அடுத்து என்ன அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை மனதிற்குள் ஏற்படுத்தியது.

    ராஜமௌலி இயக்கத்தில் , பிரபாஸ்,தமன்னா, அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பில் 2015ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.

    ரூ 200 கோடி ரூபாய் செலவில் தயாரான இத்திரைப்படம் ரூ 600 கோடி வசூலித்தது. இத்திரைப்படம் வெளியாகி தற்போது ஏழுஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

    இயக்குநரிடம் அடி வாங்கிய ரஜினி... தயாரிப்பாளரிடம் அடம் பிடித்ததால் விழுந்த அடிஇயக்குநரிடம் அடி வாங்கிய ரஜினி... தயாரிப்பாளரிடம் அடம் பிடித்ததால் விழுந்த அடி

    ஜெய் மகிழ்மதி

    ஜெய் மகிழ்மதி

    "ஜெய் மகிழ்மதி"இந்த கர்ஜனை ஒலிக்கத் தொடங்கி 7 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், இன்றும் இந்த வார்த்தையை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது. பரந்து விரிந்த காடு,ஆர்ப்பறித்துக்கொட்டும் அருவிக்கு நடுவே குழந்தையை ஏந்திய கை... இப்படி ஒரு தொடக்கத்தை இதற்கு முன் நாம் பார்த்ததில்லை என்பதால், மனதிற்குள் ஒரு பூரிப்பு ஏற்பட்டு படத்தின் மீதான ஆர்வத்தை கூட்டியது.

    சிவ சிவாய போற்றியே

    சிவ சிவாய போற்றியே

    சிவோ கதாபாத்திரத்தில் வரும் பிரபாஸ் ,சிவலிங்கத்தை தூக்கிக்கொண்டு நடப்பது கற்பனையே செய்து பார்க்க முடியாது ஒரு காட்சியாக அமைந்தது. இந்த காட்சிக்கு பின்னணி இசையாக வந்த பாடல்.. சிவ சிவாய போற்றியே... நமச்சிவாய போற்றியே மனதிற்குள் புகுந்து ஒரு கணம் மெய்மறக்க வைத்துவிட்டது எனலாம்.

    ராஜதிட்டம்

    ராஜதிட்டம்

    பார்வை, கோபம், பொறாமை என பார்ப்பவர்களும் கோபம் கொள்ளுமளவு வில்லத்தனத்தில் மிரட்டியிருப்பார் ராணா டகுபதி. தான் அரசனாகியும் மக்கள் பாகுபலியை கொண்டாடுகிறார்கள் என்ற கோபம், அப்பாவோடு சேர்ந்து தன் தாய் ராஜமாதாவை ராஜதிட்டம் தீட்டி ஏமாற்றும் காட்சிகளில் பல்வாள்தேவனின் நடிப்பு பல கைத்தட்டலை பெற்றது.

    'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?

    'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?

    ராஜமாதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு இன்னும் கண்ணைவிட்டு அகலவில்லை. 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்ற ஒற்றை கேள்வியே அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. பத்திரிக்கைகள்,ஊடகங்கள், சோஷியல் மீடியாக்கள் என எங்கு பார்த்தாலும் 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்?' என்று பட்டிமன்றம் வைத்து விவாதிக்கும் அளவுக்கு சென்றனர். இந்த ஒற்றைக் கேள்விக்கான விடை இரண்டாண்டுகளுக்கு பிறகு கிடைத்தது.

    பாகுபலி 2 பிரம்மாண்ட வேற்றி

    பாகுபலி 2 பிரம்மாண்ட வேற்றி

    2017ம் ஆண்டு பாகுபலி 2 வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மூன்று மடங்கு வசூலை வாரி குவித்தது. முதல் பாகத்திற்கு கிடைத்த பெயரும் புகழும் தான் இரண்டாம் பாகம் மகத்தான வெற்றி பெற காரணமாக அமைந்தது. ரூ.1000 கோடிக்கு மேல் வசூலைக் கடந்த முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெயரை பெற்றது. தென்னிந்திய திரைப்படங்களின் மீதான பார்வையை இத்திரைப்படம் மாற்றியது.

    Recommended Video

    நடிப்பிற்கும் வாழ்க்கைக்கும் வித்தியாசம் சொன்ன சத்யராஜ் | Radhe Shyam press meet
    அடுத்து என்ன மகாபாரதமா?

    அடுத்து என்ன மகாபாரதமா?

    பாகுபலி, பாகுபலி 2 திரைப்படத்தின் மகத்தானே வெற்றி அளித்த உத்வேகமே ஆர்ஆர்ஆர் என்ற மற்றொரு பிரம்மாண்ட படத்தை இயக்க காரணமாக அமைந்தது. ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஹாலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. 1100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது. மேலும், மகாபாரதத்தை இயக்குவது ராஜமௌலியின் கனவாக உள்ளது விரைவில் இதுக்கு அச்சாரம் இடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Baahubali the beginning completes seven years
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X