Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
'கே'(GAY) படமாகவே இருந்தாலும் அதில் என்ன தப்பு..கேள்வி கேட்ட பாகுபலி புரொட்யூசர்..ஜகா வாங்கிய ரசூல்
சென்னை : சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தப்படம் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்.
இந்தப் படம் 1920ம் ஆண்டில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்தது.
ஹாலிவுட் பிரபலங்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ள இந்தப் படம் குறித்து தற்போது ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி மோசமாக விமர்சித்துள்ளார்.
சாக்லேட்
பாய்ன்னு
சொன்னாலே
எரிச்சலா
வருது..
காரணத்தை
சொல்லி
கடுப்பான
சித்தார்த்!

ஆர்ஆர்ஆர் படம்
நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது ஆர்ஆர்ஆர். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களையும் பிரம்மாண்டமான வசூலையும் பெற்றது. இந்தப் படத்தின் மேக்கிங்கை ஹாலிவுட் பிரபலங்களும் பாராட்டித் தள்ளினர்.

சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம்
1920ம் ஆண்டின் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை பிரதிபலிக்கும் இந்தக் கேரக்டரில் ஆலியா பட், ஷ்ரேயா சரண் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்திருந்தனர். ஆனால் சிறிய ரோல்களிலேயே இவர்கள் காணப்பட்டனர். ஆலியா பட் என்ற சிறப்பான நடிகையை ராஜமௌலி வீணடித்துள்ளதாக படம் ரிலீசானபோது விமர்சனங்கள் எழுந்தன.

மோசமான விமர்சனம்
ஆனால் அந்த கேரக்டர் மிகவும் சிறப்பானது மற்றும் முக்கியமானது என்று தனக்கு பிடித்தே இந்தக் கேரக்டரை ஏற்றதாகவும் ஆலியா பட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் குறித்து பிரபல ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினீயர் ரசூல் பூக்குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் மோசமான விமர்சனங்களை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஜகா வாங்கிய ரசூல் பூக்குட்டி
இந்தப் படம் ஒரு தன்பாலின படம் என்றும் ஆலியா பட்டை செட் பிராப்பர்ட்டியாக ராஜமௌலி பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் விமர்சித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். அவர் மீதான மரியாதையே போய்விட்டதாகவும் விமர்சித்திருந்தனர். இதனிடையே இது தன்னுடைய கருத்தில்லை என்றும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களின் கமெண்ட் என்றும் ரசூல் ஜகா வாங்கினார்.

பாகுபலி தயாரிப்பாளர் கண்டனம்
தொடர்ந்து பாகுபலி படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யார்லகட்டாவும் ரசூல் பூக்குட்டியின் இந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்ஆர்ஆர் கே (Gay) படமில்லை என்றும் ஆனால் அப்படியே இருந்தாலும் அதில் என்ன தவறு என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இத்தகைய விமர்சனங்கள் மூலம் உங்களுடைய தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளீர்கள் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

விளக்கம் அளித்த ரசூல்
இதற்கும் பதிலளித்துள்ளார் ரசூல், இதை ஆமோதிப்பதாகவும் Gay ஸ்டோரியாகவே இருந்தாலும் அதில் தவறில்லை என்றும் கூறியுள்ளார். இது மற்றவர்களின் கருத்துதான் என்றும் இதை அந்த அளவிற்கு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் ரசூல் பூக்குட்டி விளக்கம் அளித்துள்ளார்.
-
2021ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. கர்ணன், டாக்டர், மாஸ்டர்.. சைமாவில் மாஸ் காட்டும் தமிழ் படங்கள்!
-
“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி
-
இயக்குநர் ஷங்கருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல்.. இந்தியன் 2வை டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!